பக்கம்:உருவும் திருவும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 உருவும் திருவும்

பழங்காவியம் ஆகிய பல துறைகளிலும் சென்றது. ஆயினும், அவர் “பாப்பா’ வுக்குப் பாடிய “பாப்பாப் பாட்டே ஈண்டு இக் கட்டுரையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

பாட்டின் தொடக்கத்திலேயே ஒடி விளையாடு பாப்பா! -நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா என்று தொடங்குகின்றார். சோம்பலின்றிச் சுறுசுறுப்பாகக் குழந்தைகள் கூடி மகிழ்ச்சி யுடன் ஆடிப்பாடி அகமகிழ்ந்து விளையாட வேண்டிய அவசியத்தினைக் கூறுகின்றார். ஆங்கிலத்தில் ‘குழந்தைகள் பெரியவர்களைக் காட்டிலும் அறிவாளிகள் (Children are wiser than their elders) Graúr(ogo, Guorro, a sor(s). Grant®au, பெரியவர்கள்போல் பிணங்கி, பிளவுபட்டு, பிரிந்து நிற்காமல் ஒன்றாகக்கூடி விளையாடவேண்டிய பண்பினை முதற்கண் கூறி, அடுத்து ஒரு குழந்தையை வையாதே பாப்பா என்று அறிவுரை கூறுகின்றார். ஒருவரை யொருவர் வைகின்றஏசுகின்ற பண்பால் வேற்றுமை வளர்ந்து, ஒற்றுமை சீர்குலைந்து, நட்பும் பாழ்பட்டு, நல்ல மனமும் திரிகின்ற தன்மையினைப் பார்க்கிருேம். எனவே, ஏச்சற்ற இனிய பண்பினைப் பாரதியார் வலியுறுத்துகின்றார்.

சின்னஞ் சிறு குருவி வானத்திலே எவ்விதக் கவலையு மின்றிச் சிறகடித்துப் பறக்கின்றது. மனங்கவரும் வண்ணப் பறவைகள் இன்பவாழ்வு வாழ்கின்றன. அதைப் போலவே குழந்தைகளும் நெஞ்சில் எவ்விதக் கவலையுமின்றி மகிழ்ச்சி யுடனும் மலர்ச்சியுடனும் வாழவேண்டும் என்று கூறி, கொத்தித் திரியும் கோழியுடன் கூடி விளையாடி, எத்தித் திருடும் காக்கைக்கும் இரக்கங்காட்ட வேண்டும் என்று எடுத்து மொழிகின்றார். பாரதியின் இக்கூற்று, கீதையில் கண்ணன் “பகைவனுக்கும் அருளவேண்டிய பண்பினை வலி யுறுத்தியிருப்பதைேடு இணைத்துப் பார்க்கத் தக்கது.

பாலைப் பொழிந்து தரும் பசுவும், வாலைக் குழைத்து

வரும் நாயும் நண்பர்கள் என்று கூறி, வண்டி இழுக்கும் நல்ல குதிரையையும், நெல் வயலில் உழுதுவரும் மாட்டையும்,