பக்கம்:உருவும் திருவும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் வாழ்வு 125

இவ்வேளையில் நாட்டின் நல்விடுதலைக்குப் போாரடிக் குற்றஞ் சாட்டப்பெற்ற பாபு அரவிந்த கோஷ் புதுவை நகர் வந்து சேர்ந்தார். அவர்தம் தொடர்பு பாரதியாருக்குப் பலவிதத் திலும் நன்மை அளித்தது. அடிமைத் தளையை அகற்றி யெறிய வேண்டுமென்று பாடுபட்ட தென்னாட்டு வீர இளைஞர் திலகங்களும் புதுவை நகரைப் புத்தார்வத்தோடு நெருங்கினர். எனவே, புதுச்சேரி, விடுதலைப் பரணி முழக்கும் பாசறையாக ஆனது; சுதந்திர வீரர்களின் தாயகமாயிற்று. செந்தமிழ் இன்பத்தில் சிறக்கத் திளைத்த செம்மல் வ. வே. சு. அய்யர் அவர்களும் புதுவையில் குடியேறினர். இதே நேரத் தில் இந்தியா’ பத்திரிகை நின்று போய், அதன் பின்னர்க் “கர்மயோகி’ என்ற பத்திரிகை தொடங்கப் பெற்று, அதுவும் நின்று போய்விட்டது. ஆயினும், பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த நாட்களில் பெருந் தொல்லைக்கு உள்ளாகியிருந் தாலும், பிரெஞ்சு மொழிப் புலமை பெற்றார். கவிதைகள் பலவற்றை-குறிப்பாகப் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு முதலியனவற்றை அங்கேயே எழுதினர். “எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்’ என்பது பாரதியார் கூற்றாகும்.

1914-15 ஆம் ஆண்டுகளில் ‘சுதேச மித்திரன்’ பத்திரிகையை நடத்திய திரு. அரங்கசாமி ஐயங்கார் தம் பத்திரிகைக்குப் பாரதியார், வேண்டிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினால், திங்கள் ஊதியம் தருவது என்று அறிவித்திருந்தார். இவ்வாய்ப்பை நன்கு பயன் படுத்திக் கொண்டு நகைச் சுவை மிளிரும் சிறு கதைகளையும், அறிவாராய்ச்சிக்குத் து னை புரியு ம் கட்டுரைகளையும், இனிமை பொங்கும் இன்னிசைத் தீம்பாடல்களையும் பாரதியார் எழுதிக் குவித்தார். இதனால் அவர்தம் செல்வ வளமும் உயர்ந்தது. நாட்டின் நல்வாழ்விற்காக-விடுதலைக் காகப் பாடுபட்ட காங்கிரஸ் நிறுவனத்தின் ஐம்பது ஆண்டு வரலாற்றினைப் பாரதியார், தொடர்ந்து ‘சுதேச மித்திரனில்: எழுதிவந்தார். வங்காள அறிஞர்-தாவர சாத்திரத்துறை