பக்கம்:உருவும் திருவும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் கூறும் அறம் 29

கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனும் அவன்கட் படுமே.

-புறம்: 183.

இவ்வுலகில் விளக்கமுறும் அறங்கள் யாவினும் மேலான அறம் பொய் பேசாமையே என்பதனைத் திருவள்ளுவர்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று

-திருக்குறள்: 297.

என்ற குறளால் உணர்த்தினர். அரிச்சந்திரன் பல துன்பங் கள் பட்டபோது இறுதிவரை உறுதியாக வாய்மையிலிருந்து வழுவவில்லை என்பதனை வீரகவிராயர் பாடிய அரிச்சந்திர புராணத்தில் வரும்,

பதியி ழந்தனம் பாலனை யிழந்தனம் படைத்த நிதியிழந்தனம் இனி.எமக் குளதென நினைக்கும் கதியி ழக்கினும் கட்டுரை யிழக்கிலே மென்றார் மதியி ழந்துதன் வாயிழந் தருந்தவன் மறைந்தான்

என்ற பாடலால் அறியலாம். இவ் விழுமிய கருத்தினையே புறநானுாறு,

வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் மெய் கூறுவல்

-ւIյուb: 139, 5-6,

என்று குறிப்பிட்டுள்ளது. எப்படியாயினும் வாழ்ந்தால் போதும் என்ற வாழ்வினை வற்புறுத்தாது. இப்படித்தான் வாழவேண்டும் என்ற குறிக்கோள் வாழ்வினை இவ்வடிகள் வற்புறுத்துகின்றன. ஈயென இரத்தலின் இழிவினையும், கொள்ளெனக் கொடுத்தலின் உயர்வினையும்,