பக்கம்:உருவும் திருவும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழங்கிய வான்மறை 37

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப வாறு சமயத்தார்-கன்றென எப்பா லவரு மியைபவே வள்ளுவளுர் முப்பால் மொழிந்த மொழி

என்று திருவள்ளுவ மாலையும்,

சமயக் கணக்கர் மதி வழி கூருது உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன்

எனக் கல்லாடமும் கவினுற விளக்குகின்றன.

திருவள்ளுவர் உலக உயிர்களின் இயக்கங்களை நன்கு உணர்ந்தவர். உயிர்களின் பல்வேறு நிலைகளை நுனித்தறிந் தவர். உலக வாழ்க்கையில் தாம் கண்டு தெளிந்த உண்மை களைச் சிக்கல் ஏதுமின்றித் தெள்ளத் தெளிவாக மக்கள் மனத்தில் எளிதில் பசுமரத்தாணியெனப் பதியும் வண்ணம் தம் அணுவை துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறளால் வாரி வழங்கிய பெருந்தகை அவர். எனவேதான், மதுரைத் தமிழ் நாகனர் என்னும் தண்டமிழ்ப் புலவர், சீரிய சிறந்த பொருள்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண் டொளிர்வது திருக்குறள் என்ற கருத்தில்,

எல்லாப் பொருளும் இதன்பாலுள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்

என்று கூறியுள்ளார். திருக்குறளின் சிறப்பினை விளக்கவந்த மற்றாெரு புலவரும்,

பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ? பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ?

என்று பாடியுள்ளார்.