பக்கம்:உருவும் திருவும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

46 உருவும் திருவும்

நாட்டின் செங்குன்றில் கணவனுடன் செல்லும் தெய்வநிலை யாய் முடிவடைகின்றது. ஆக, கண்ணகியின் வரலாற்றில் நாம் மூன்று வெவ்வேறு நிலைகளைக் காண்கின்றாேம்.

முதலாவதாகப் புகார்க் காண்டத்தில் நூலாசிரியர் இளங் கோவடிகள் கண்ணகியைப் பின்வருமாறு அறிமுகப் படுத் கின்றார்;

நாகரீ ணகரொடு நாகநா டதைெடு போகள்ே புகழ்மன்னும் புகார்ருக ரது தன்னில் மாகவாணிகர் வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்ன வீராருண் டகவையாள் அவளுங்தான். போதிலார் திருவினுள் புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் றிறமிவ டிறமென்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதல்ால் பெயர்மன்னுங் கண்ணகியென் பாண்மன்னே.

-சிலப் மங்கல வாழ்த்துப் பாடல் : 21-29.

இவ்வாறு கண்ணகியை அடிகள் முதற்கண் நமக்கு அறி முகப்படுத்தும் பொழுதே, கண்ணகி திருமகளை யொத்த புகழ்வடிவினள் என்றும், பழுதில்லாத அருந்ததியின் புகழை யுடைய கற்பினள் என்றும், உலகின் பிற மகளிர் தொழு தேத்தத் தக்க பெருங்குணங்களைக் காதலிப்பவள் என்றும் அழகுற அறிமுகம் செய்து வைக்கின்றார். இதைக்கொண்டே கண்ணகியின் கற்பு மேம்பாடு காரணமாகத் தாம் தரும் மதிப் பிற்கு இளங்கோவடிகள் தோற்றுவாய் செய்துவிடுகின்றார். அவ்வழி மேலும் மேலும் சிறப்புறவே தம் கதையினையும் வழி நடத்திச் செல்கின்றார்.