பக்கம்:உருவும் திருவும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மென்மையும் வன்மையும் 57

அடர்த்தெழு குருதி படங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை யல்லள் அறுவர்க் கிளைய கங்கை இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றாெழிற் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை யிழந்தாள் கடையகத் தாளே

-சிவப்: வழக்குரை காதை: 34-43.

“அவள் கொற்றவை அல்லள்: பிடாரி அல்லள்; பத்திர காளி அல்லள்; துர்க்கை அல்லள்; கறுவு கொண்டாள் போலவும் பொற்சிலம்பொன்று ஏந்திய கைளாய் ஒருத்தி வந்துள்ளாள்’ என்று வாயிற்காவலன் கூறும் கூற்றிலேயே கண்ணகியின் வன்மை புலனுகின்றது. அடக்கமே உருவாக இருந்த கண்ணகி எங்கே? இப்பொழுது துர்க்கையினும் சீற்றம் கொண்டு சீறும் கண்ணகி எங்கே? மன்னனிடம் கூடவன்றாே மருளின்றித் தனக்கேற்பட்டுவிட்ட குறைபாட்டினை அஞ்சாது எடுத்து மொழிகின்றாள்?

“தேரா மன்ன செப்புவ துடையேன்” என்று தொடங்கித் தன் ஊர். பெயர், அவன் தன் முறைதவறிய செயல் முதலிய வற்றினை உணர்த்தி, அவனை உயிர்துறக்கும்படி செய்கிருள். பாண்டியைேடு அவன் தன் மனைவியாம் கோப்பெருந்தேவியும், ‘கணவனை இகழ்ந்தோர்க்குக் காட்டுவது இல்லென அவன் மலரடி தொழுது உயிர்விடுகிருள். அதுபோதும் சீற்றம் தணியாத கண்ணகி, யான் ஒப்பற்ற கற்புடைய மகளிர் பிறந்த புகார்ப் பதியின்கண் பிறந்தேன். யானும் ஒர் பத்தினியாயின் அரசோடு மதுரையையும் ஒழிப்பேன்’ என்று வஞ்சினம் மொழி கிருள்: