பக்கம்:உருவும் திருவும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 உருவும் திருவும்

விளங்கப் பெரிதும் காரணமாயிருந்தவர்கள் நம் மறக்குடி மங்கையரே ஆவர். கடைச்சங்க நூல்களில் ஆங்காங்கு வீரப் பெண்டிரின் பெருமையைப் புகழ்ந்து வந்த வழக்கமும் இருந் தது. இந்த வழக்கத்தைப் புறப்பொருட்டுறைகளில் மூதின் முல்லை” என்று புலவர் புகன்றனர்.

பண்டைத் தமிழகத்தில் மறக்குலத் திலகங்கள் ஆற்றிய வீர வினைகள், நூலறிவும் நுண்ணறிவுத் திறமையும் உள்ள நாநலம் வாய்ந்த நல்லிசைப் புலமைப் பேறுபெற்ற பெண் புலவர்களாலேயே பாடப் பெற்றிருப்பது பீடு தருவதொன் ருகும். புறத்துறைப் பொருளமைந்த சங்க நூலாகிய புறநானுாற்றில் பொன்முடியார் என்ற பெண்பாற் புலவர், தாய், தந்தை, கொல்லன், வேந்தன், மகன் ஆகியோரின் கடமைகளைக் கூறவந்தவிடத்து,

ஈன்றுபுறங் தருதல் என்றலைக் கடனே: சான்றாே ளுக்குதல் தந்தைக்குக் கடனே: வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே, நன்னடை கல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சம முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

என்கிறார். இப் புறப்பாட்டிலிருந்து தாயின் மனநிலையும், நம் நாட்டு மக்களின் வீர வாழ்க்கையும் தெற்றெனப் புலளுகின் றன. என்றலைக் கடனே’ என்பதனால், புறந்தருதல், தலையாய கடனென்பதும், மற்ற பிற கடன்களும் உண்டு, அவைகளெல் லாம் அதன்பின்னரே வைத்தெண்ணப்படும் என்பதும் வெள் விடைமலை.

மேலும், வேறொரு பாட்டும் புறநானூற்றில் காணக் கிடக்கின்றது. இப் பாட்டை இயற்றியவரும் ஒரு பெண்