பக்கம்:உருவும் திருவும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 உருவும் திருவும்

அவள் உடன்பிறந்தோன் போர்க்களத்தில் களிற்றினை எறிந்து இறந்துபட்டுக் கிடக்கவும், அண்மையில் நிகழ்ந்த அடுபோரில் தன் அருமைக் கணவன் எதிர்ப்பட்ட பகை வரைக் கொன்று இமையவர் உலகைச் சேர்ந்திருப்பவும், இவற்றிற்காகவெல்லாம் மனம் உளைச்சலின்றி, அஞ்சா மையைக் கைவிடாது, போர்ப்பறை ஒசை செய்வதைக் கேட்டு மாரு மகிழ்ச்சி கொண்டு, தான் பெற்றெடுத்த பச்சிளம் பசலேயைத் தழுவி எடுத்து, அச்சிறுவனுக்கு அழகிய ஆடைகளே அணிவித்து, அவன் உச்சியை நெய்யிட்டுச் சிவிக் சிகை முடித்து தான் ஒரே ஒரு மகனையே உடையவளா யிருப்பது கண்டும் சிறிதும் கவற்சியுருது, கண்களிலும் கண்ணிர் வடிக்காது. போர்க்களம் நோக்கி விரைந்து செல்க என வழியனுப்பி வைக்கின்றாள். இச் செயல் கண்ட என் மனம் கெட்டொழிவதாக இவள் நெஞ்சுரம், பாலையினுய் கடுமையானது: பழங்குடிப் பிறந்தவள் என்பது இவளுக்கே தகும்’ என்று கூறுகிறார் இச் செய்யுளில் விரச்சுவை எப்படித் ததும்பி வழிய நிற்கிறது? உயிரையும் ஒரு பொருட்டாக மதியாத தமிழரின் வீரம் வியக்கத் தகுந்த தொரு செயலென்பதில் ஐயம் என்னே?

இத்தகைய விர மக்கள் அஞ்சா நெஞ்சத்தினராய் அமரிடைச் சென்று ஆண்டு யாதேனும் காரணம் பற்றிக் சிறிது மனம் தாழ்ந்து இழிசெயல்களைப் புரிவாராயின், அவர்கள் தாய்மா இவர்களேச் சினந்து வெறுப்பர். ஒரு தாய் தன் மகன் ‘கை வேல் களிற்முெடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்’ என்ற குறள் கொடுத்த கோமான் வாக்கிற்கு மாகுப்ப் பகைக்களிற்றின் மேலே வேலை விசி யெறிந்து அவ் வேலேத் திரும்பப் பெறும் ஆற்றல் அற்ற வளுய், வெறுங்கையகுய்ப் புறம்போந்து வீடு விரைந்தது கண்டு, வாது வல்வயிறே எனத் தொடங்கும் பாடல் ஒன்றினை மனம்வருந்திக் கூறி மிகவும் வெறுத்தனள். தன் புதல்வன் போரிலே யானையை வீழ்த்திக் கொன்று தானும் மடித்தான் என்னும் நல்ல செய்தி கேட்டு, அவனைப் பெற்ற