பக்கம்:உருவும் திருவும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 உருவும் திருவும்

என்ற பெயரினைச் சுந்தரர்க்குரிய பெயராகக் கூறுகின்றார்; நூலிற்குச் சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது. எடுக்கு மாக் கதை இன்தமிழ்ச் செய்யுளாய்’ என்று ஆசிரியரே கூறும் தொடர்கொண்டு, பெரிய புராணம் ஒரு பழங்கதை பற்றிய தொடர்நிலைச் செய்யுளாம்” எனத் தேர்ந்து துணியலாம்.

அடியவர்கள் தம் பெருமையினைத் திருக்கூட்டச் சிறப்பு என்ற சருக்கத்தில் சேக்கிழார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கிஞர்.

-பெரிய. திருக்கூட்டச் சிறப்பு: 8.

வாழ்க்கையில் ஏற்படும் நன்மையையும் தீமையையும்

ஒத்துக் கா னு கி ன் ற உள்ளம் உயர்ந்த உள்ளமே ஞானியர் உள்ளமாகும். இந்நிலையினைத் தண்டியாசிரியர் சமநிலை’ என்பர்; வடமொழியாளர் சாந்தம்’ என்பர்.

உடலில் வாள்கொண்டு அறுப்பினும் சந்தனம் பூசினும் ஒத்த நிலை உற்றுணர்வார் யாவரோ அவரே ஞானியின் நிலையினைப் பெற்றவர் ஆவர். இதனை வெண்பாவிற் புகழேந்தி தாம் இயற்றிய நளவெண்பாவில்,

மெய்த்திருவருந் துற்றாலும் வெந்துயர்வந் துற்றலும்

ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே

என்று தருமன் மனத்துயரின் காரணத்தை உசாவிய வியாசர் கூற்றால் விளக்குகின்றார். சேக்கிழார் பெருமான் திருநாவுக்கரசு நாயனர் வரலாற்றினைக் கூறும்பொழுது, இவ்வரிய மனநிலையினை எடுத்து மொழிகின்றார். திருநாவுக்கரசர் தம் முதுமைக் காலத்தில் திருப்புகலூர்த் திருக்கோயிலின் திருமணி முன்றிலில் உழவாரப் பணி செய்