பக்கம்:உருவும் திருவும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கட்டிய கலக்கோயில் 97

மாதிரம் எவையும் நோக்கான் வளநகர் நோக்கான் வந்த காதலர் தம்மை நோக்கான் கடற்பெருஞ் சேனை நோக்கான் தாதவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்கத் தானப் பூதலம் என்னும் நங்கை தன்னையே நோக்கிப் புக்கான்.

-கம்ப. யுத்த. கும்பகருணன் வதைப்படலம் 3.

மேலும் மனத்தில் எழும் எண்ணங்களைக் கவிதையாக வடிக்கும் ஆற்றல் கவிஞன் கம்பனுக்குக் கைவந்த கலே யாகும். இராகவனிடம் தோற்று இலங்கை சார்ந்து அமளி போந்த இராவணன் கண்துஞ்சாமல் கவலையில் துஞ்சினன். கையற்ற நெஞ்சினய்ை உள்நிறை மானம் உருத்தெழ நெடு மூச்செறிந்தான். அதுபோது, வானவர். மண்ணுலகில் உள்ளோர்டதன் பகைவர்கள் எல்லாம்-தன் நிலைகண்டு நகுவர் என்பதற்காக அவன் நாணவில்லை. ஆனால், மிதிலைப் பொன்னும் சீதை தன்னைப் பார்த்துக் கைகொட்டி, நகைப்பளே என்ற எண்ணம் மீதுார, அதனல் வந்த நாணத்தின் பெருக்கால் உள்ளமும் உடலும் கூசிக் குறுகு கின்றான். இச் செய்தியினைக் கவிக்கூற்றால் காண்போம்:

வான்நகும் மண்ணும் எல்லாம் நகும்மணி வயிரத் தோளான் தான்ங்கு பகைவர் எல்லாம் நகுவர்என்று அதற்கு நாளுன் வேல்நகு நெடுங்கண் செவ்வாய் மெல்லியல் மிதிலை வந்த சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பு கின்றன்.

-கம்ப. யுத்த. கும்பகருணன் வதைப்படலம்: 11.

அடுத்து, குணத்தைக் குணியாக வருணிக்கும் கவிதைப் பண்பு கம்பனிடம் குறைவறக் குடிகொண்டுள்ளது. செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகராம் இலங்கை சென்று அசோக வனத்தில் சிறையிருந்த செல்வியாம் சீதையைக் கண்டு திரும்பும் அனுமன் இராமனிடம் கூறும் கூற்றால் இதனை அறியலாம். ‘வில்லாற்றல் பொருந்திய வீரனே! இலங்கையில் நான் சீதையைக் கண்டேனல்லேன்! இற் பிறப்பும், இரும்பொறையும், கற்பும் பொருந்திக் களிநடமிடு

உ. தி.-7