பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் கடிதங்கள் என்று காதலிற் கனிந்து கூறியதாக ஆசிரியர் கவிவடி வில் தீட்டிய ஓவியம் அறிஞருள்ளத்தைக் கவனிப்ப தாகும். இதனுள் "கோட்டெருத்தஞ் செய்தநோக்கு" சாய்ந்த கழுத்துத் தந்தபார்வை என்னும் பொருள் தாகும். அவள் தன்னை நோக்குங்கால் கழுத்தைச் சிறிது சாய்த்துப் பார்த்ததைக் கண்டானாகலின், அத் தோற்றமே அவனுள்ளத்தைப் பிணித்த தென்றார். இது வியக்கத் தக்க தொன்று.

பிறிதோரிடத்துக் குணமாலை யென்பாள், ஒரு பெண்கள் திலகம், நீராடித் திரும்புங்கால் ஒரு யானை யால் தாக்கப்படும் நிலையில் சீவககுமரன் சென்று தன் ஆண்மையால் அவ் யானையை அடர்த்து விலக்கி அவளைப் பாதுகாத்துச் செல்ல விடுத்தானாக, அந்நிலை யில் இருவர்க்குங் காதல் ததும்பியது. கன்னிய ருற்றநோய் கண்ணனார்க்கு மஃது இன்னதென் றுரையலர் நாணி னாதலால் 'கைக ளாற்சொலக் கண்களிற் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன்" என்று அவள் கருதுவாளாயினாள். மூங்கை என்பது ஊமையாகும். இங்கே ஊமையின் இலக்கணத்தை ஆசிரியர், 'கைகளாற் பேசக் கண்களாற் கேட்பது' என்றும், உள்ளச் செய்திகளை வெளிப்படுத்துப் பேச இயலாமையால் நினைவு பலவாக நிறையுமாதலின் "மொய்கொள் சிந்தை" என்றுங் கூறியது நினைந்து இன்புறத்தக்கது. இங்ஙனம் குணமாலை நினைவும் செயலும் காதல் வயப்பட்டுருக்கும் நிலையில், "வெஞ்சின வேழ முண்ட வெள்ளிலின் வெறிய மாக நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்களுாற் கவர்ந்த கள்வி"