பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் கடிதங்கள் 105 For 19 இனி, மாதவி கணிகையர் குலத்தவள்; கோவ லன்பால் சிறந்த காதற்கிழமை பூண்டொழுகியவள்; அவள் கடிதம் எழுதியது முன் அவனோடு அனுபவித்த பின்னரேயாம். அந் நிலையில் அவன் உள்ளத்தைப் பன்னாட் பழகி அறிந்தவளாதலின், தன் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தினாலும் அவன் அறிந்துகொள்ளுவா னென்று அவள் கருதுவது இயல்பே. இந்நிலையில் மன்மதன் கொடுமை கூறு பவளாய், 'அக்காமவேள் என்னும் அரசற்கு மகிழ் துணை புணர்க்கும் வேனிலாளன் இளவரசன் ஆவ னென்றும், அவன் கொற்றக்குடை திங்களாதலால் அத்திங்கட் செல்வன் பிறப்பிலே கோட்டமுடையவன் என்றுங் கூறி, இப்பரிவாரங்களை யுடைய காமன், புணர்ந்துளோர் ஊடல் முதலியவற்றாற் காலம் நீட் டிப்பினும், ஓதல் முதலியன குறித்துப் பிரிந் துளோர் குறித்துக்க கூறிய பருவம் பொய்த்துத் தம் துணையை மறப்பினும், இன்பம் நுகரும் அவ்வுயிரைப் பூவாளிகளாற் கொள்ளும் இயல்பினனென்பது புதிய தொன்றன்று; இதனை அறிவீர்களாக' என்று அவள் எழுதியது பொருத்தமே. உண்மைக் காதலுடையார் இயல்பை உலகியல்பில் வைத்துக் கூறு முகமாகத் தன்னிலையைப் புலப்படுத்தினாள். இங்கே இளவரச் னாகிய வேனிலாளன் துணைபுணர்ப்பவ னாதலாலும், திங்கட் செல்வன் பிறப்பிலே கோட்டமுடையவ னாதலாலும் பிரிந்திருக்கும் தனக்கு நலஞ்செய்யார் என்னுங் கருத்துத் தோன்றக் கூறியது இன்புறந்தக்க தொன்று. மாதவி கணிகையர் குலத்தவளாயினும் மிக்க நாகரிகமும் ஒரு வழிப்பட்ட காதலும், அறிவும்