பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 உரைநடைக் கோவை களிற் பரக்கக் காணலாம். அகமும் புறமுமாகிய பொருள்களை இயனெறியில் திறம்பாமல் உலகியல் ஒழுக்கத்தொடு இயைத்துப் புலனெறி வழக்கமாகப் பாடல் செய்யுந் திறம் சங்க காலத்துப் புலவர்களுக்கு அமைந்தது போலப் பிற்காலத்தவர்பாற் காண்ட லரி தாகும். பாடல்களில் அமையவேண்டிய ஆழமுடைமை இனிமை எளிமை என்னுங் குணங்களுள் ஆழமுடைய மையும் இனிமையும் சங்க இலக்கியங்களில் நன்கு அமைந்துள்ளன என்பதை யாவரும் எளிதில் உணர் வர். எளிமை கால வேறுபாட்டால் அவ்விலக்கியங் களில் அருமையாக மாறுதல் அடைந்துள்ளது. அப் பாடல்கள் தோன்றிய காலத்து அந்நடை எளிமை யாக இருக்கலாம். அக் காலத்துப் பயிற்சியில் முதிர்ந்த செந்தமிழ்ச் சொற்கள் இயல்பாக வழங்கப்பட்டிருக்கக் கூடுமாதலின், அப்பாடல் நடைகளும் அங்ஙனமே அமைந்துள்ளன என்று கோடல் பொருந்தும். இற்றை ஞான்று மொழி நடையில் முதிர்ந்த பழஞ் சொற்களும் தொடர்களும் சிறிது சிறிதாகக் கைவிடப்பட்டு வந்தமை யால் முன்னைப் பாடல் நடைகள் இப்பொழுது நமக்கு எளிமையில்லாதனவாகக் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களுள் ஒரு சிலவற்றைத் தெளிவாகப் பொருளுணர்ந்து படித்து அடிக்கடி பழகி வருவோமா யின் அந்நடையும் நமக்கு எளிமையாக அமையும் எதுகை மோனை நிமித்தம் வறிதே அடை மொழிகளைப் புணர்த்துப் பொருட்சுருக்கமும் சொற் பெருக்கமும் அமைய யாக்கப்படும் பிற்காலத்தவர் பாடலகள் நுண் ணறி வுடையார்க்கு இன்பஞ் செய்வனவாகா. சிறு சொல்லேனும் வறிதே விரவாமல் உய்த்துணருந்