பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை சாரல் நாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே" என்பதாம். 127 இதன்கண், தலைமகனது குறிஞ்சி நிலத்து வரு ணனையாக, 'ஆண் குரங்கு இறந்ததாக அதன் பிரிவில் கைம்மைத் துன்பத்தை ஆற்றாத அதன் பெண் குரங்கு தன் இளங்குட்டியைச் சுற்றத்திடைச் சேர்த்துவிட்டு, உயர்ந்த மலையினின்றும் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளும்' என்னுஞ் செய்தி கூறப்பட்டுள்ளது. இத னால், நின் நிலத்துள்ள விலங்கும் பிரிவாற்றாது இறந்து படுதலை அறிகின்றாய்; ஆதலின் நினக்கு டையூறு நேருமேல் தலைவி உயிர்வாழ்தலை விரும்பமாட்டாள் என்பது அறிவிக்க வேண்டிய தொன்றன்று என்று தோழி தலைமகனுக்குச் சொல்லக் கருதிய செய்தி குறிப்பிற் புலப்படுதலை அறியலாம். 5 மக்கள் மனநிலை இனிப் பழங்காலத்துத் தமிழ் மக்கள் மனநிலைகளை அறிதற்குச் சங்க நூல்களே சிறந்த கருவிகளாகும். ஒருவனும் ஒருத்தியுந் தம்முட்கொண்ட காதல் எத் தகைய இடையூற்றானும் பிறழ்ச்சி எய்துவதன்று. காதல் வயத்தான் ஒன்று கூடுவார் தம் மனத்திற்குச் சான்றாக வேறுபொருள்களை எதிர் பார்ப்பதில்லை. அவ ரவர் உள்ளங்களே சான்றாவனவாம். களவொழுக் கத்து நெடுங்காலம் பயின்று கற்பு முறையில் மணஞ் செய்துகொள்ளாதிருந்த தலைவனியல்பைக் குறித்துத் தலைமகள் தோழியை நோக்கி, 'தோழீ! என்னைக் களவில் மணந்த காலத்தில் தலைவன் சான்றா