பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 முறை விரும்பப்பட்டும், இழிதகவாகிய காம நிலையில் உள்ளத்தைச் செல்லவிடாது தனக்குத் தீங்கு செய் தார்க்கும் நன்மையே செய்தும், உரிய சமயங்களில் அறவுரைகளைக்கொண்டு அறிவுக் கலக்கமுற்றாரைத் தேற்றியும் அருளறததை வளர்த்த பெருமை மணி மேகலைக்கே சிறந்ததாகும். திருவள்ளுவர் தவத்தின் இலக்கணங் கூறுங்கால், மணிமேகலை "உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு என்றனர். தனக்கு நேர்ந்த பல வகைத் துன்பங் களையும் பொறுத்துப் பிறவுயிர்களுக்கு ஒரு சிறிதும் துன்பஞ் செய்யாமையோடு நன்மையும் புரிந்த தவப் பெருஞ் செல்வியாக விளங்கினமையின், மணி மேகலையே அதற்கு இலக்கியமாவாள். 23 இன்னும் இவ்வம்மை, சாவக நாடு, இலங்கை முதலிய அயல் நாட்டு யாத்திரையையும், வஞ்சி, காஞ்சி முதலிய உண்ணாட்டுச் செலவையும் மேற்கொண்டு, ஆங்காங்குப் பற்பல அறங்களைப் புரிந்தும், ஞான மிக்க தவச் செல்வர்களிடத்தில் தருமோபதேசங்களைப் பெற்றும், பற்பல சமய உண்மைகளைக் கேட்டும், சிறப்பாகப் பௌத்த மத உண்மைகளை உணர்ந்தும் ஒழுகுவாளாயினாள். அறிவு வளர்ச்சி யடைதற்கு அயல் நாட்டு யாத்திரை பெரிதும் உதவியாகுமென்னும் உண்மையையும் இவ்வம்மை சரிதம் புலப்படுத்துவ தாகும். சமயவாதிகள் பற்பலரை அடுத்து உண்மை தெளிதற்கு வாதித்ததும், மாறுபட்ட கொள்கை