பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலமை புலவர் பாடும் புகழுடையா ரன்றே, தானே இயங் கும் வானவூர்திக்கண் இவர்ந்து செல்லும் நல்வினை யாளர் என எண்ணப்பட்டனர்/ புலவராற் பாடப் பெறுவது ஒன்றே தம் வாழ்க்கையின் பயனெனக் கொண்டு மகிழும் முன்னை வேந்தர் நன்ன ருள்ளம் எத்துணைச் சிறந்த தென்பதை விரித்துரைக்கவும் வேண்டும் கொல்/ குறித்த பகைவனை வென்று வெற்றி மாலை புனையேனாயின் உயர்ந்த கல்வி. கேள்விகளை யுடைய மாங்குடி மருதன் தலைவனாகவுள்ள பலர் புகழுஞ் சிறப்பு வாய்ந்த புலவராற் பாடப் பெறாது என் நிலவெல்லை நீங்குக " என்று சூளுரை பகர்ந்த தமிழ்ப் புல வேந்தன் உள்ளப் பாங்கை உள்ளிப் பார்மின்! குறித்தாங்கு இன்னது செய்யேனாயின், இன்ன தீவினையாளனாவேன் என்னுஞ் சூளுரையிற் புலவராற் பாடப் பெறாத தொன்று பெருந் தீவினைப் பயனெனக் கொள்ளப்படின், அன்னார் பாடற்பேறு அரசர்தம் வாழ்க்கைக்கு எத்துணை விழுமியதெனக் கருதப்பட்ட தென்பதை உற்று நேக்குமின்கள் ! 58 இத்தகைய சிறந்த நிலையிலிருந்த நம் முன்னைத் தமிழ்ப் புலவர் வழித்தோன்றல்களாகிய இக் காலத்துப் புலவர் பெருமக்கள் நிலை, சிறிது வருந்தத் தக்கதாக உள்ளது. புலவர்க்குரிய உயரிய நோக்கங்களும் வரவரக் குறுகி வருகின்றன. அவரைப் புரக்கும் இயல்பினராகிய திருவுடையார் நிலையும் புலமைக்கு மதிப்பளிப்பதாக இல்லை. எதற்கு எது காரணமென்பதை ஈண்டு ஆராய வேண்டா. அவரவர் கடமையை அறிந்து கோடலே சிறந்ததாகும். கல்வி, மேற் அறிவின்பத்தை அளித்து வாழ்க்கையைத் தூய்மைப் படுத்தற்குரியதாம்