பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலமை வருகின்றனர். அக்கூற்றுக்கள் அவர்தம் புலமைத் தவறுதலையே புலப்படுத்துவனவாம். அவர் அறியா மையால் அங்ஙனங் கூறின், அஃதொரு பெருந் தவறாகாது, அறிவுடையார் தேற்றத் தேறுவராகலின். அறிந்து கூறுவரேல், அது புலமைக்கு இழுக்காகும். பழையன கழிதலினும் புதியன புகுதலினும் முறையே தீமையும் நன்மையும் அறிந்து கோடல் நன்று. கால நிகழ்ச்சிக்கு ஏற்பன ஏலாதன என்பதை நெடிது சூழ்ந்து முடிவு செய்தல் வேண்டும். 57 தம் மொழிக்கு ஏற்றங்கூற முற்பட்டுப் பிறமொழி களைப் பழித்துரைத்தலுந் தவறாகும். தம் மொழிக் கண் இல்லாத சிறப்பொலி யெழுத்துக்கள் வேற்று மொழிக்கண் இருத்தல் கண்டு, 'அவை எதற்கு?' என ஒரு புலவர் ஒரு பேரவையில் எள்ளி நகுவரேல், அவர் புலமையி னியல்பை எவ்வாறு கருதலாம்! ஒருவன் பாலுள்ள பொருள் இருப்பின், அதுபற்றி அவன் எள்ளப்படுதல் யாண்டுங் காணாததொன்று. குழுவில் உரைக்கப்படும் பொருளுரை அவ்வளவினன் றிப் பரந்த அறிவுலகத்துக்கும் ஏற்ப விளங்குதலன்றோ நலமாகும்! அன்பர்களே ! இன்னோரன்ன இழுக்கு நெறிகளில் நம் புலமை வாழ்கையை நடத்தலாகாது. ஒருவரைப் புனைந்து பாடுங்கால், "அவர் செய்யாதனவற்றைச் சொல்லி அவர் குணங்களைக் கூறுதலை யறியாததாகும் எம்முடை சிறிய செவ்விய நா என்ற புலவர்