பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை இனி நிறுவப் பெறுவனவுமாகிய பல கல்வி நிலையங் களெல்லாம் அத்தமிழ்ப் பெருங் கல்லூரிக்குக் கிளை களாக அமைதல் வேண்டும். சிறந்த நூலுரைகளை ஆக்கிப் புலமை யரங்கேறி னார்க்குத் தகுதியான பட்டங்களும் பரிசுகளும் வழங்கி அவரைப் பெருமைப் படுத்தல் வேண்டும். தமிழி னியல்பை நன்குணராது ஆரவார நீர்மையராய்ப் போலி நூலுரைகளை வெளிப் படுத்தித் தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் இழுக்குண்டாக்கும் போலிப் புலவர்களை அறிந்து அறிவுறுத்தி அவரை நல்லியற் புலவராக்க. முயலவேண்டும். உண்மைத் தமிழறிஞரை ஒடுங்கி யிருக்க விடாது, சிறப்பிடனளித்து உவகை யுறுத்தல். வேண்டும். இயல் வரம்புடைய நம் மொழிக் கண் அவ் வரம்பிகந்து வெளிப்படும் புலத்துறைக் கொல் லாப் போலி நூலுரைகள், செவ்விதின் ஆக்கப்பட்ட சீரிய நூல்களுக்குக் களைகளாக நெருங்கிப் படர்ந்து தீங்கு புரிகின்றனவாதலின் அக்களை கட்டல் சொல்லே ருழவராகிய தமிழ்ப் புலவர் கடனாகும். அக்களை களையப்பட்டாலன்றி நம் செழுந்தமிழ்ப் பைங்கூழ் வளர்தற்கு இடமின்றாகும். தீஞ்சுவை மிக்க திருவருட் கனியை நமக்கு உதவத் தோன்றிய செழுந் தமிழ்ப் பைங்கூழைப் பல்லாற்றானும் போற்றிக் காத்தாலன்றோ. அந் நற்பயனை நன்கு பெறமுடியும்? ஆங்கிலம், வடமொழி முதலிய வேற்று மொழி களிலுள்ள பல துறைப்பட்ட அரிய நூல்களை அவ்வம். மொழியோடு தமிழ் கற்ற மதி நுட்பமுடைய புலவர்