பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலமை J 63 செந்தமிழ் புலவர்காள் ! இனிப் புலமை வாழ்க்கைக்கு வேண்டுவன பல வுளவெனினும், புலவர் மாநாட்டைத் திறந்துவைக்கும் ஒருவன் கடமை இதனினும் நீண்டு சேறல் முறை யன்றாதலின், இம் மட்டில் அமைகின்றேன். நுங் கட் டளைப்படியே திருவருட்டுணைகொண்டு இம்மாநாடு திறக்கப்பெறுகின்றது. இதனுட் புகுமின் /புகுதுங் கால் முதற்கண் எல்லாம் வல்ல இறைவன் திருவருளை நெஞ்சார நினைமின் ! தமிழ்த்தாயை வாழ்த்துமின் யான் கூறியவற்றுட் கொள்ளுவன் கொண்மின்! இன்னும் புலமை வாழ்க்கைக்கு வேண்டுவன சூழ் மின் / சூழ்ச்சி முடிவி. துணிவு எய்துமின் ! அத்துணி பொருளைத் தாழாது செயலின் மேற்கொண்மின் நாகரிக மிக்க உலகங்களால் நம் தமிழ்ப்புலமை பாராட் டப் பெறும் வண்ணம் ஒழுகுமின் ! புலமை வாழ்ககை யின் சிறந்த நோக்கங்கள் நிறைவேறப்பெற்று நல் லின்பம் எய்துமின் / இதுகாறும் என் சிற்றுரையைச் செவியேற்று உளங்கொண்ட நும் பெருமைக்கு என் வணக்கம் உரியதாகுக.