பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்க வாசகர் என்னும் தமிழ் மறையில் யாழிசைக்கு வேதப் பாடல் கள் பற்றுக்கோடாக விளங்கின என்பது புலனாகும். தமிழ் நாட்டில் இசைக்கலை வளர்ச்சி யடைந்த காலம் தேவார திருவாசக காலம் என்பது யாவர்க்கும் உடன்பாடாகும். 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்றும், 'கானத்தின் எழுபிறப்பு' என்றும் திருஞானசம்பந்தர் பெருமை கூறப்படுகிறது. திருவாசகப் பாடல்களின் சொற்களை யும் எழுத்துக்களையும் சுரநிலங்களில் அமைத்துப் பாடினால், சுரங்களுக்குப் பாடல் அமைந்ததோ பாடல்களுக்குச் சுரம் அமைந்ததோ என்று இசைவல் லார் பெருவியப் பெய்துவர். பிறவிப் பிணிக்குச் சார்ந்த மருந்தாகவுள்ள அரும் பொருள்களைப் பாடல்களில் அமைத்து இசையாகிய அநுபானத்தோடு ஊட்டுதற்கு முற்பட்டவர் மணிவாசகப் பெருந்தகை யாவர். இவர்கள் பற்பல சிவதலங்களுக்குச் சென்று, ஆங்காங்குக் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவனை உள்ளத் தமைத்துப் பாடும் முகமாகத் தம் அநுபவ உணர்வை அன்பர்களுக்குத் தெளிவாகப் புலப்படுத்தி யுள்ளார். எங்கும் நிறைந்த பரம் பொருளைச் சில இடங்களில் மாத்திரம் உள்ளதாகக் கொண்டு பாடியது பொருந்துமோ எனின், ஒரு பசு வின் உடல் முழுதும் பால் பரவியிருப்பினும், அது தோன்றுவதற்குரிய உறுப்பின்றிப் பிறிதிடத்து வெளிப் படாதவாறு போல, மக்கள் வழிபாட்டிற்கிரங்கி அருள் புரிதற்கு அருட்குறிகளின் முகமாக ஆண்டவன் வெளிப்பட்டு அருளுவர். இவ்வுணர்ச்சி மேற் கொண்டே, ( 79.