பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 உரைநடைக் கோவை அவரே, நிற்காணிற் புறங்கொடுத்தலின் ஊறறியா மெய்யாக்கையோடு கண்ணுக் கினியர் செவிக்கின் னாரே அதனால், நீயும்ஒன் றினியை அவருமொன் றிளியர் ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி நின்னை வியக்குமிவ் வுலகமஃது என்னோ பெரும வுரைத்திசின் எமக்கே." இப்பாடற் கருத்து: 'அரசே ! நீ போரைக் காணின், அப்போரை வென்று பகைவரது படையை விலக்கி எதிர் நிற்றலான், அவர் வாட் படையால் வடுபட்ட உடலுடனே கூடியிருத்தலின் காண்பார் கண்ணுக்கு அழகுடையை யல்லை; கேட்ட செவிக்கு இனியை, நின் பகைவரோ, போரில் புறமுதுகிட் டோடுதலால் உடம்பில் யாதொரு வடுவு மில்லாராய்க் கண்ணுக்கு இனிய ராவார்; கேள்விக்கு இன்னா ராவார். அதனால் நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர். இங்ஙனம் நீயும் நின் பகைவரும் ஒப் புடைய ராகும் நிலையில், நின்னை வியக்கும் இவ்வுலகம் அஃது என்னோ பெரும!' என்பதாம். பகைவர் உடம் பில் வடுப்படாமையால், பிறர் கேள்விக்குப் பழி மிக் குடையராக வுள்ளார் என அவர் வசை ஒரு வகை நயந் தோன்றக் கூறப்பட்டது. இங்கே 'நீயுமொன்றி னியை யவரு மொன்றினியர்' எனத் தோற்றோடிய வரைப் புகழ்வதுபோலப் பழித்திருக்கும் செய்தி வியக் கத் தக்கதொன்று. இனிச் சங்கத்துச் சான்றோர் நூல்களுள் அகப் பொருள் பற்றி எழுந்த பாடல்களில், இவ் வங்கதக்