பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு ஒருமுதலாய அழிவின்றி ஒங்கொளியாய் நிறைந்துளதாய் உயிர்கள்தோறும் விரவிஉடன் தொழிற்படுத்துப் புலம் கொளுத்தி வீடுய்க்கும் பதியாம் எம்மை” என்று சிவஞான முனிவர் கூறுகின்றனர். இனி, உயிர்கள் எண்ணில்லாதனவாகும். இவற்றை ஒரு மலம் உடையவை, இருமலம் உடையவை. மும்மலம் உடையவையென மூவகையாகக் கூறுபடுத்திச் சித்தாந்த நூல்கள் உரைக்கின்றன. பளிங்குக்கல் எந்தப் பொருளைச் சார்கிறதோ அந்தப் பொருளின் வண்ணத்தை யடைவதைபோல், உயிர்களும் சார்ந்த பொருளின் தன்மையைத் தாமும் பெறும் இயல்புடையவை. உயிர்ப்பொருளுக்கு எக்காலத்தும் அழிவு இல்லை; என்றும் உள்ள பொருளேயாம். சத்து இது அசத்து இது எனப் பகுத்தறிய வல்லது சத்தாகிய உயிர் நம் கண்ணொளி யானது; இருளோடு சேர்ந்தபோது இருளாயும் ஒளியோடு சேர்ந்தபோது ஒளியாயும் நிற்கும். அப்படி நின்றாலும் கண்ணொளி இருளும் ஒளியுமாகாது வேறே. அதுபோல, உயிர்ப்பொருள் சத்தோடுகூடிச் சத்தாகியும், அசத்தோடுகூடி அசத்தாகியும் சதசத்து என வேறாகவே நிற்பது. உயிர் எவ்வெவ் வுடம்பிற் சென்று தங்குகிறதோ அவ்வவ்வுடம்பளவும் நிறைந்து நிற்கும்; சிவ முதற் பொருளின் அருளால் கட்டு நீங்கி வீடு பேறடையும் தன்மையுடையது. உயிர் உணரும் தன்ம்ை யுடையதேயாயினும் தானே எதனையும் உணராது. பிற அறிவுடைப் பொருள் உணர்த்த உணரும் சிறுமையுடையதாகும். உயிரது அறிவு, உணர்த்த உணரும் சிறுமையும், உலகுயிர்களை ஒன்றொன்றாய்ப் பார்த்தறியும் சிறுமையும் உடையது. இதனை, “எண்ணிலவாய் வகைமூன்றாய் வெண்சிலைபோல் பற்றியவை தாமாய் என்றும் உண்மையவாய்ச் சத்தசத்தும் பகுத்துணர் சத் தாய் இருளும் ஒளியு மல்லாக் கண்ணியல்பாய் வசிப்பவரு நிறைவாய் எம் மருளால்கட் டறுத்து வீடு நண்ணுபவாய் உணர்த்தஉணர் சிற்றறிவிற் பலவாம்நற் பசுக்கள் தம்மை" என்று வரும் செய்யுளில் காணலாம். உயிர்களுக்கும், உலகுக்கும் தொடர்புண்டாவதற்குக் காரணமாகிய கட்டு (பாசம்) மூவகைப்படும். அவை, மலம் மாயை, கன்மம் என்பனவாகும். மலம் என்பது ஒன்றாய் அழிவில்லாத அளவிறந்த உயிர்களையும் அனாதியே பற்றி