பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புகழ்ப்பொலிவேடு! 59 நினைவிலிருக்கும். உடனே அதைக் கூறி விளக்குவார். ஆனால் தமது மூக்குக்கண்ணாடியையும், மூக்குத்துள் சிறுபேழையையும் அடிக்கடி மறந்து யாண்டுந் தேடும் மாண்தக்கோர் அவரே. பேரறிஞர்க்குச் சிறு செய்திகளில் மறப்பு நிகழ்வதியற்கை யன்றோ! விடியற்காலையில் உரைவேந்தர் வெந்நீர் காய்ச்சுவதற்கு விறகினைச் சிறு கூறுகளாக வெட்டித் தருங்கைத்தொழிலை, மிக விருப்பத்துடன் ஆர்வமாகச் செய்வதிவர் பழக்கமாகும். எழுபது வயது மேனியுள் ஏழு வயது குழந்தையுணர்வு தவழ்வது நினை தோறும் வியப்பும், உவப்பும் அளிக்கின்றது. - புலவர் தி.நா.அறிவொளி o: o: 圣、 * * பேராசிரியர் ஒளவை துரைசாமியின் தமிழ்ப் பணியைப் பாராட்டி உரைவேந்தர், சித்தாந்த கலாநிதி விருதுகள் வழங்கப்பட்டன. மதுரைப் பல்கலைக் கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இலக்கண நுணுக்கம், சிந்தனை வளம், கல்வெட்டுக்களைக் காட்டித்தெளிய வைப்பது முதலிய நலங்களால் இவர் உரையை உலகம் புகழ்ந்தது. ஒளவை மூதாட்டியார் "சங்கத் தமிழ் மூன்றும் தா” எனக் கேட்ட பாடலை நாம் அறிவோம். ஆனால், தமிழுலகம் 'சங்கத் தமிழ் மூன்றும் தா என்று ஒளவை துரைசாமி அவர்களிடமே கேட்டுப் பெற்றது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், தமிழ்த் தொண்டு செய்த பெரியார் என்ற வகையில், ஒளவை துரைசாமிக்குக் கேடயம் பரிசாக வழங்கியபோது, மேடைக்குத் தளர்ந்த நிலையில் வந்திருந்து, “தமிழ்த் தொண்டாற்றிய எனக்கு, நீங்கள் வாள் அல்லவா தந்திருக்க வேண்டும். எவரிடமிருந்து என்னைக்காத்துக் கொள்ளக் கேடயம் தந்திருக்கிறீர்கள்” என்று முழங்கினார். ஒளவை துரைசாமி மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்தபோது, அழகப்பர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த திருமதி டாக்டர். இராதாதியாகராசன் அம்மையார் இவரிடம் தமிழ்க் கல்வி கற்ற பெருமை வாய்ந்தவர். ஒளவை அவர்களின் செந்தமிழ்ச் சாயலும், சங்கத் தமிழ்ச் சால்பும் அம்மையார் உரைகளில் மிளிர்வதைக் காணலாம். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்தபோது நிறைவு நாளன்று, பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் வழியாகப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள், ஒளவை துரைசாமி அவர்களுக்கு ரூ.10,000 பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தார்.