பக்கம்:உலகத்தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

உலகத் தமிழ்


கள் உயர்ந்தன, பொருள்கள் நிறைந்தன, செல்வம் பெரு கிற்று; பொருளாதாரம் வளர்ச்சியுற்றது. இக்தியாவைப் போன்ற பெரும் நாடுகளுக்குக்கூட நிதியுதவி செய்யும் அளவிற்குப் பதினைந்து ஆண்டுகளில் உயர்த்துவிட்டது மேற்கு ஜெர்மனி. உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ! இது தமிழ் மொழி; ஆனால் ஜெர்மானியர் வாழ்வின் முச்சு நமக்கும் அது முச்சாகும் நாள் எந்நாளோ! நாமும் அவரவர் பணியினை வஞ்சனையின்றி ஆர்வத்தோடும் நாணயத்தோடும், நொடியும் விணாக்காது ஆற்றும் நாள் எந்நாளோ!

பிராங்க்போர்ட் விமான நிலையத்தில் பயணிகள் கூடத்தில் அமர்ந்து, அந்நாட்டின் அழிவையும் மீண்டும் புத்துயிர் பெற்று, வளமும் வலிவும் பெற்றுப் பெருமை யோடு வாழ்வதையும் எண்ணி, அதைப்போல் நாமும் உயர்வது எந்நாள் என்று ஏங்கியது என் மனம் அது இமைப்பொழுதில் தெற்கே நெடுந் தூரத்திற்கு தாவி விட்டது. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்குக்கப்பால் சென்று இறங்கியது. அதோ ஆப்பிரிக்காவில், பெல்ஜியன் காங்கோவில் லாமபரீன் என்னும் ஊரில் ஐம்பதாண்டுக்காலம் மருத்துவ நிலையத்தை நடத்திய சான்றோர் ஆல்பர்ட் சுவைட்சர். என்ன கம்பிரமான தோற்றம்! ஐம்பத்தைந்து ஆனடுகளுக்கு முன் அவர் மருத்துவத் தொண்டைத் தொடங்கிய மாட்டுத் தொழுவம் மின்னி மறைந்தது.

மாட்டுத் தொழுவத்து மருத்துவமனை இன்று கட்டட வசதியுடைய மருத்துவமனை. தொள்ளாயிரம் பேர் இருந்து நலம் பெறும் பெருமனை! இன்னும் முன்னேற்றமடைய வேண்டியிருக்கும் அப்பகுதிக்கு யாரும் சென்று பணீபுரிய முன்வராத மோசமான பகுதிக்கு, போய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/23&oldid=480548" இலிருந்து மீள்விக்கப்பட்டது