பக்கம்:உலகத்தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உல்லாசப் பயணம்

39


ஈராண்டிற்கு முன் புதிய சோதனை செய்து பார்த்தார்கள் டி. வி. எஸ். பள்ளி ஆசிரியர்கள். மாதச் சம்பளத்தை வங்கியின் மூலம் செலுத்தும்படி கோரினார்கள்.நிர்வாகமும் ஒப்புக்கொண்டது சம்பளப் பட்டு வாடா இப்படியே நடந்தது. பல மாதங்களுக்குப் பின் கணக்குப் பார்த்தார்கள். எல்லோர் கணக்கிலும் இல்லாவிட்டாலும், பலர் கணக்கில், மாத சம்பளம் எஞ்சியிருக்கக் கண்டார்கள். ‘கையிலே சம்பளம் பெற்றிருந்தால் வெற்றாட்களாகவே தொடர்ந்திருப்போம். வங்கி வரவுச் சம்பளம் தங்கிச் சேருது’ என்று சம்பந்தப்பட்டவர்கள் மகிழ்ந்தார்கள்.

இதைச் சொல்லி மகிழ்ந்தேன். நல்ல தெம்பிலே உள்ள மல்யுத்த வீரர்; அவரது உடம்பிலே ஓடுகிறது உயிர்த் துடிப்புள்ள குருதி, இரண்டொரு நொடி சிறிது இரத்தத்தை ஓரிடத்தில் நிறுத்தினால் என்ன ஆகும்? அவர் மயங்கி விழ்வார் இரத்தம் இருந்தால் போதாது. ஒடினால்தான் உயிர் வாழ்க்கை. அதேபோல் பணம் இருந்தால் போதாது. ஒடி, உதவினால்தான் பொருளாதார உயிர் மாறாகக் கோடிகோடி வீடுகளில் பூட்டிப்பூட்டி வைத்தால், நாட்டின் பொருளாதாரம் மயங்கிக் கிடக்கும். எனக்குத் தெரிந்தால் போதுமா?

சுவிஸ் நாடு வங்கிகளுக்குப் பெயர் போனது என்பதைச் சிதம்பரநாதன் நினைவுபடுத்தினர்.

அந்நாட்டில் வங்கிக் கணக்கு பரம இரகசியம். அதை யாருக்கும் ஒருபோதும் வெளியிடக்கூடாது என்பது அந் நாட்டுச் சட்டம். எனவே, சுவிஸ் மக்கள் மட்டுமல்லாது, பிற நாட்டவர்கள்-இலட்சக்கணக்கானவர்கள்-தங்கள் பணத்தைக் கறுப்பானாலும் வெள்ளையானாலும் சுவிஸ் நாட்டு வங்கிகளில் போட்டு வைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/38&oldid=480797" இலிருந்து மீள்விக்கப்பட்டது