பக்கம்:உலகத்தமிழ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாரை நம்புவது?

பற்றி இங்கேயே விரிவாக அலசிப் பார்த்து, முடிவிற்கு வரமுடியுமா? இத்தகைய அறிஞர் அவையில் பல்வேறு கருத்துக்களைப் படைக்கிறோம் நோக்கம் என்ன? அறிஞர்கள் இவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, தெளிவான முடிவிற்கு வரத் தூண்ட வேண்டும். இதற்காகவே பெரிய பொருள் பற்றி, சிறிது நேரத்தில் கூறிவிடும் ஏற்பாடு இப்போது எந்த முடிவிற்கும் வர வேண்டா. தொடர்ந்து ஆராய்ந்து பார்த்து முடிவு காணுங்கள்.’

‘இப்போது, தேநீருக்கு நேரமாகிவிட்டது. வாருங்கள் போகலாம்.’ எனவே முடிவு எடுக்கவில்லை.

எவ்வளவு மிகைப்படாத உண்மை. ‘தேநீர்’ எத்தனை முறை மாநாட்டவர்களுக்குக் கைகொடுத்தது தெரியுமோ? தேநீர் வாழ்க.


13. யாரை நம்புவது?

தமிழர் மூத்தகுடி தமிழ் முத்தமொழி. முதுமைக்கு அயர்வு எளிது. எனவே, நாம் கருவூலங்களைக் காக்காமல் கைவிட்டுவிட்டோம். வரலாற்றை வகையாக எழுதி வைக்கத் தவறி விட்டோம். அண்மைக் காலத்தில் நம் நாகரிகமும் கலையும் மொழியும் உலக அறிஞர்களின் கருத்துக்களைக் கவர்ந்தன. அதன் விளைவுகளில் ஒன்று அனைத்துலகத் தமிழ்க் கல்வி ஆராய்ச்சி மன்றம். இது சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

பல்வேறு நாட்டுத் தமிழ் அறிஞர்களும் ஒன்று கூடி ஆலோசிக்க, ஏற்பாடு செய்ய நினைத்தது மன்றம் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு நடத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/80&oldid=481175" இலிருந்து மீள்விக்கப்பட்டது