அவர் காண விரும்பிய நாடு 39 போர் முரசொலி, அடியோடு எங்கும் எப்போதும், அழிந்து படுவதில்லை. முரசு இருந்து, அதைக் கொட்டும் திறம் உடையோர் முன் வராமல் இருந்ததுண்டு ; முர சறையும் திறமுடையார் இருந்து, முரசு அமையாது. இருந்ததுண்டு. ஆனால், அடிமைப்பட்ட எந்த நாடும். எப்பாடுபட்டேனும், எத்தனை முறை தோற்றேனும், விடுதலையைப் பெறாமல் போனதில்லை. ஏறத்தாழ, இயற்கையின் கட்டளை, இந்த விடுதலை வேட்கை, எனவேதான், எவ்வளவு பெரிய பலமுள்ள நாட்டின் பிடியிலே சிக்கி விட்டாலும், ஒரு நாள், விடுதலை பெறு வோம் என்ற எண்ணம், கருகுவதில்லை. விடுதலைப் போர் நடத்தப்படும் காலம், நாட்டின் வரலாற்றிலே சுவையுள்ள பகுதி - வீரச்செயல்கள், தியாக நிகழ்ச்சிகள் நிரம்பிய பகுதி. குன்றுகள் கோட்டைகளாகி, வீதிகள் போர்முகாமாகி, வீடுகளெல் லாம் பாசறையாகி, நாட்டு மக்கள் வீரர்களாகும் வேளை அது. அப்போதெல்லாம் அவர்களின் ஒரே நோக்கம், ரே லட்சியம், தன்னாட்சி பெறுவது என்பதுதான் தோட்டத்துக்குள்ளே புகுந்த புலியை விரட்டி அடித்துக் கொல்லவேண்டுமென, தோட்டக்காரர். தன் துணைவருடன் கூடி ஆயுதமெடுத்து, புலி தப்பி ஓடாத படி நாற்புறமும் நல்ல முறையில் காவல் அமைத்து, தீரமாக உள்ளே நுழைந்து புலியுடன் போராடுகிற போது, எப்படியாவது இந்தப் புலியை அடித்துக் கொன்றுவிட்டால் போதும் என்ற ஒரே எண்ணம் தான் தோன்றும். புலி கொல்லப்பட்டதும், "அப்பா! கொன்று விட்டோம் புலியை. இனிப் பயமில்லை
பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/40
Appearance