உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஆறாம்பதிப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

je அவர் சிந்திய இரத்தம் மகாராஜாக்கள் இருந்தனர்-இன்றும் இருக்கின்றனர். மடாதிபதிகள் இருந்தனர்- இன்றும் இருக்கின்றனர். மாயா ஜாலம், மகேந்திர ஜாலம் தெரியும் என்று கூறிக் கொண்டவர்கள் இருந்தனர்-இன்றும் இருக் கின்றனர். ஆருடம் கணித்து, இனி இன்னின்னபடி ஆகும் என்று கூறும் ஆற்றல் எமக்குண்டு என்று கூறுபவர்கள் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர். யோகம் தெரியும், ஆண்டவனைக் காட்ட எம்மால் முடி யும், அகிலமெல்லாம் அடக்கிடும் வித்தை தெரியும் என்று பேசினவர்கள் இருந்தனர்.-இன்றும் இருக்கின்றனர். அவர்கள் இருந்தனர் என்பது மட்டுமல்ல, நிலைமை, மகாராஜாக்களுக்கு வரி செலுத்திக்கொண்டு பய பக்தி விசுவாசம் காட்டிக் கொண்டு, மக்கள் இருந்தனர். அந்த மகாராஜாக்கள், தேவகட்டளையால் பூர்வ புண்ணியவசத்தால், சிங்காதனம் ஏறும் பாக்கியம் பெற்றார்கள் என்று மக்கள் எண்ணினர்.