பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

உலக உத்தமர் காந்தி



நாட்டு மக்களிடம் நம்பிக்கை ஊட்டினார்; அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்; நானிலத்தின் நன்மதிப்பைப் பரிசாகப் பெற்றார்.

'முடியுமா?' என்ற சந்தேகத்தை அவர் விரட்டினார். நாடு விடுதலை பெறவேண்டுமா, அல்லவா? என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டார்; ஆம் என்றது அவருடைய தூய்மையான உள்ளம் -- உள்ளம் உரைத்ததை ஊராருக்கு அறிவித்தார் ஊரார் சந்தேகமும் பயமும் கொண்டனர். விடுதலை வேண்டும், நாடு மீளவும், கேடு தீரவும், தாம் இனி மனிதராய் வாழவும், கட்டாயமாக விடுதலை வேண்டும்; ஆனால் நம்மால் முடியுமா? என்று கேட்டனர்.

'விடுதலை வேண்டும் என்று மனம் கட்டளையிட்டுவிட்ட பிறகு மறு கேள்வி ஏது?' அவர் கேட்டார்.

'அவர்கள் பலசாலிகள்' மக்கள் கூறினர்.

'நாம் பலம் பெறவேண்டும். பெறுவோம்' அவர் உரைத்தார், உறுதியுடன்.

'சிறையிலே தள்ளுளார்களே' பயத்துடன் கூறினர் மக்கள்.

'தள்ளுவர் -- ஆனால் இப்போது உள்ள இடமும் சிறை தான், இது பெரிய சிறை' அவர் பதில் சொன்னார், நகைச்சுவையுடன்.

தடியடி, துப்பாக்கி, தூக்குமேடை, அந்தமான் தீவு என்பன போன்ற எத்தனையோ ஆபத்துகள் அடுத்தடுத்து