பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தங்கப் பாத்திரத்தில் யார்தான் பிச்சையிட மறுப்பர்? -கீழ்நாடுகள் அளவற்ற செல்வமுடையவர்களுக்கு அளவற்ற தேவை களுண்டு. -பாரசீகம் வறுமை மனிதர்களை உண்டாக்கும், செழிப்பு அரக்கர்களே உண்டாக்கும். -ஃபிரான்ஸ் செல்வனுக்குத் தன் நண்பர்கள் எவர்கள் என்று தெரியாது. -ஃபிரான்ஸ் தங்க நங்கூரம் இருந்தால், எந்தத் துறையிலும் தங்கலாம். -ஜெர்மனி வெள்ளிக் கட்டிலில் சயனிப்பவன், தங்கக் கனவுகள் காண்பான். -ஜெர்மனி தங்கக் குவியல் கவலையின் குவியல். -ஜெர்மனி யசமானருக்கு ஜலதோஷம், வேலைக்காரர் அனைவரும் தும்மு கிருர்கள். -போலந்து அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும். -போலந்து என் கையில் பணமிருந்தவரை நான் எல்லோருக்கும் சகோதரனக இருந்தேன். -போலந்து பணக்காரகை வேண்டுமானல், ஒருவன் பன்றியாகிவிட வேண்டும். -போலந்து செல்வம் நீரிழிவை உண்டாக்கும்; பேராசை காய்ச்சலையும், சுதந்திரம் கிறுகிறுப்பையும், வறுமை திமிர்வாதத்தையும் உண்டாக்கும். -ஸ்காட்லந்து வெள்ளத்தோடு வந்ததெல்லாம் வடியும்போது போய் விடும். -அமெரிக்கா செல்வத்தை அடிக்கடி குறை சொல்கிருர்கள்; ஆனால் அதை வேண்டாமென்று வெறுப்பாரில்லை. -டென்மார்க் தங்கத்தையே குறிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பவன் கண் பார்வையை இழந்து விடுவான். -ஹாலந்து பாதிப் பணக்காரனகி விட்டால், முழுப் பணக்காரனவது எளிது. -எஸ்டோனியா