பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி கல்வியே மனிதனை உருவாக்குகின்றது. -இங்கிலாந்து வயது வந்தவர்களுக்குச் சிறைச்சாலைகள் கட்டுவதைப் பார்க்கினும், குழந்தைகளுக்குப் பள்ளிகள் அமைப்பது தன் மகனைப் பயனற்றவகைச் செய்பவன். ஒரு_திருடனை வளர்க்கிருன். -இங்கிலாந்து அதிகப் படிப்பும் மிகக் குறைந்த படிப்பும் மனவளர்ச்சிக்கு இடையூறுகள். -ஃபிரான்ஸ் கல்வி செல்வத்திற்கு அணிகலன், வறுமைக்கு அடைக்கலம். -கிரீஸ் கற்றவர்களே சுதந்திர முடையவர்கள். -கிரீஸ் கல்வியின் வேர்கள் கசப்பானவை. கனி இனியது. -கிரீஸ் மாணவனை மதிப்பதே கல்வியின் இரகசியம். =5rLoffaruár பொதுமக்களின் கல்வி அரசாங்கத்தின் முதற் கடமையா யிருக்க வேண்டும். -நெப்போலியன் பெண்ணைப் படிக்க வைத்தல் குரங்கின் கையில் கத்தியை அளிப்பதாகும். -இந்தியா மாணவர்களே பிற்கால ஆசிரியர்க்ள். -இந்தியா கலியாணத்தால் கல்வி போம், மனைவி வீட்டுக்கு வந்தபின் எல்லாம் போம். -இந்தியா முதல் பட்டத்திற்கு படிப்பதுதான் கஷ்டம்; அடுத்த பட்டம் தாகை வரும். -சீன படிப்பில்லாதவர்கள் உடையை அணிந்த கால்நடைகள். கவிழ்ந்துள்ள கிண்ணத்துள் கதிரொளி பிரகாசிக்காது. அறிவுக் கதிர்களை அறுவடை செய்யக் கண்ணிர் மழை அவசிய மாகும். -சீன