பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கல்லையும் சொல்லையும் விட்டாற் போச்சு. -இங்கிலாந்து த ைஉயிரோடிருக்கும் பொழுது பாதங்களிடம் பேச வேண் டாம். -அயர்லந்து புருவைப்போல் வாயிலிருந்து, பறந்து பறந்து சென்ற ஒரு வாத்தையை நாலு குதிரைகள் சேர்ந்தாலும் இழுத்து வர முடியாது. is -ஸெக் உன் பேச்சுத் திறமையைக் காட்டி நண்பனை இழக்காதே. -இத்தாலி நாவாகிய பேனவை இதயத்தின் மையில் தோய்த்து எழுத வேண்டும். -லத்தீன் புகழத் தெரியாதவனுக்குப் பேசவே தெரியாது. -லத்தீன் பேச்சில் அதிகச் சுருக்கமா யிருந்தால் நீ சொல்வதைப் புரிந்து கொள்ளல் அரிது, அதிக விரிவாயிருந்தால் தொந்தரவாக எண்ணப்படும். -ரஷ்யா பணப்பைக்குத் தக்கபடி, வாயை அடக்கிக்கொள். -ஸ்பெயின் இதயம் சொல்லாததை யெல்லாம் வாய் அளந்துவிடும். -அரேபியா பேசுவதற்கு ஆளிருந்தால், கேட்பதற்கு ஆள் வருவான். -ஃபின்லந்து பேசிய வார்த்தை கேட்டவர்களுக்கே சொந்தமாகிவிடும். -அமெரிக்கா சரியான சந்தர்ப்பத்தில் சொல்லும் வார்த்தை, வெள்ளித் தட்டிலே வைத்த தங்கக் கனி போன்றது. -செர்பியா பேச்சுக்கு மட்டும் வரி கிடையாது. -அயர்லந்து இதயத்தின் நிறைவிலிருந்து வாய் பேசுகின்றது. -புதிய ஏற்பாடு முதலில் சிந்தனை செய், பிறகு பேசு. -இங்கிலாந்து 'உன் நண்பனைப்பற்றிப் பெருமையாகப் பேசு, உன் பகைவனைப் பற்றி ஒன்றும் சொல்லாதே. -இங்கிலாந்து பேச்சின் உண்மையான உபயோகம் நம் சிந்தனைகளை மறைத் துக் கொள்வது. -இங்கிலாந்து