பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

நரகத்திலுள்ளவர்கள் சுவர்க்கம் வேறு இல்லையென்று நினைக்கிறார்கள். - இங்கிலாந்து நரகப் பாதையில் நல்லெண்ணங்களால் தளம் போடப் பட்டிருக்கிறது. - இங்கிலாந்து (தொடக்கத்தில் எல்லோரும் நல்லெண்ணத்துடன்தான் தொடங்குவர், ஆனால் செயல் புரியும்போது வேறு வழியில் திரும்பி விடுவர்.)
நரகத்துள் இறங்குதல் எளிது. -விர்கில் தீமைக்குப் பதிலாக நன்மையைச் செய்தால், எந்த நரகுக்கும் அஞ்ச வேண்டாம். - இங்கிலாந்து நரகம் ஆண்டவரின் கோபம்- பாவத் தீயின்மீது அவருக்குள்ள வெறுப்பு. - இங்கிலாந்து

நரகத்திற்குச் செல்லும் பாதை நடக்க எளிதாயுள்ளது.

-கிரீஸ்

தத்துவ ஞானம்

பிறந்ததற்காக அழும் குழந்தை அறிவுள்ளதுதான் - பார்சி குழந்தை 'ஏன்' என்று கேட்பதுதான் தத்துவஞானத்தின் திறவுகோல். -இதாலி அடுத்தவன் மனைவியைத் தன் தாயென்றும், மற்றவன் உடைமைகளை மண்கட்டிகளென்றும், மக்கட் சமூகத்தைத் தானென்றும் கருதுபவன் தத்துவஞானி. - இந்தியா

தத்துவஞானிக்கு எலிகூடத் தோண்டுவதைக் கற்பிக்கும்.

-சீனா

வறுமையின் இனிய பால் தத்துவஞானம்.

- இங்கிலாந்து பலர் தத்துவ ஞானிகளைப் போலப் பேசுகின்றனர்; ஆனால் மூடர்களைப் போல வாழ்கின்றனர். -சீனா தத்துவஞானிகள் சந்திர மண்டலத்தில் வசிப்பவர்கள் - சீனா நீ தத்துவஞானியாக இரு, ஆனால் தத்துவத்தோடு, மனிதனாகவும் இரு. - ஹ்யூம்