பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 சிக்கனம் என்பது ஏழைகளுக்குச் சொத்து, செல்வர்களுக்கு நல்லறிவு -ஃபிரான்ஸ் சேமித்து வைத்த ஒரு பைசா இருமுறை சம்பாதித்ததாகும். -இத்தாலி பையில் காசு தட்டிப்போனபின், சிக்கனம் செய்தல் பயனில்லை. -லத்தீன் சிக்கனம் இருந்தால், மற்ற நல்ல பண்புகள் யாவும் வந்துவிடும். -லத்தீன் வருவாயில் ஒரு பகுதியைச் செலவு செய்யவும், இரு பகுதி யைத் தொழிலுக்குப் பயன் படுத்தவும், நான்காம் பகுதியை ஆப்த்துக் காலத்திற்காகச் சேமித்து வைக்கவும். -பர்மா அறுவடைக்குத் தக்கபடி வாழ்ந்துகொள். -பாரசீகம் குறைவான பணத்தைச் செலவழிப்பது கஷ்டம், அதிகப் பணத்தை அள்ளிவிடலாம். -சயாம் தேவையில்லாதவைகளை வாங்குவோன், விரைவில் அவசிய மானவைகளையும் விற்க நேரும். -ஃபிரான்ஸ் பெரும் செல்வம் சேர்க்க அதிகக்_கஷ்டம் தேவையில்லை: (முதலில்) சிறிதளவு சேர்க்கவே சிரமப்படவேண்டும். -ஃபிரான்ஸ் பணம் சேர்ப்பது கைகளால், ஆனால் செலவழிப்பது கால் களால்! -ஜெர்மனி பீர் குடிக்க வசதி யிருந்தால், நீரைக் குடி, திராட்சை மது குடிக்க வசதியிருந்தால், பீரைக் குடி. -போலந்து சிக்கனத்திற்கு மேலான ரசவாதமில்லை. -அமெரிக்கா தொப்பியை உடனே தூக்கவேண்டும், பணப் பையைத் திறக்கத் தாமதம் வேண்டும். -இங்கிலாந்து அவசியமில்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை -- விற்கவேண்டியதிருக்கும். -லெக் சிக்கனமுள்ளவனுக்கு முன்று பேர்களின் வருவாயைப்போல் சேரும். -ஸ்ெக் தங்கத்தை விட்டெறிபவன் செம்பைப் பொறுக்கும்படி நேரும், -ஸ்ெக்