பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

சூரியனுக்கு மகத்தான ஒளி எப்படி வந்தது? சூடு எப்படி ஏற்பட்டது? கவனிப்போம்.


6. இயற்கையின் ரசவாதம்


ரச வாதம் என்கிற வித்தை நமது நாட்டுக்குப் புதியது அன்று. நீண்ட காலம் முன்பே நமது சித்தர்கள் இதுபற்றிக் கூறியிருக்கிறார்கள், யோகிகள் சொல்லியிருக்கிறார்கள்.

இன்னும் நமது நாட்டிலே எவ்வளவோ பேர், செம்பைப் பொன்னாக்க முயல்வது உண்டு.

'இது சாத்தியமா? செம்பு பொன்னாகுமா?' என்று ஐயம் கொள்ளலாம். ஓர் உலோகத்தை மற்றோர் உலோகம் ஆக்குதல் இயலாது என்று வாதிடலாம்.

ஆனால் இயற்கையில் என்ன நடக்கிறது?

ரச வாதமே நடக்கிறது. ஓர் உலோகம் மற்றொன்றாக மாறிக்கொண்டுதான் இருக்கிறது.