பக்கம்:உலகியல் நூறு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை உலகியல் நூறு என்னும் இந்நூலின் தலைப்பு, உலகின் இயற்கைத் தன்மைகளேப் பற்றிய நூறு பாடல்களேக் கொண் டது என்று பொருள் தருவதாகும். இது 1973-74-ஆம் ஆண்டுக்கிடையில் எழுதப் பெற் றது. அக்கால் தென்மொழிக் குடும்பம் கடலூரில் (தெ. ஆ.) இருந்தது. என் சிங்கைச் செலவு (1974)-க்குப்பின் குடும்பம் சென்னேக்கு மாற்றப் பெற்றது. அதன்பின், 1976-இல் இது தென்மொழியில் (சுவடி : 18 ; ஒலே : 3) வெளிவரத் தொடங்கு கையில், நான் ஒராண்டு மிசா'ச் சிறையை ஏற்றுச் சென்னை, நடுவண் சிறையில் வைக்கப் பெற்றிருந்தேன். அக்கால், இது தொடர்ந்து வெளிவந்து, 1978 ஏப்பிரல் - மே மாதத் தென்மொழி இதழில்,(சுவடி : 14 ; ஒலே : 12-இல்)முடிவுற்றது. இத் தொடர் வெளி வருகையில், என் நூல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் த.முத்துக்குமரன், க.இ. அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பும், கூடவே வெளிவந்தது. வாய்ப்பிருக்கையில், ஆங்கில மொழிபெயர்ப்பு தனித்தோ, மூல நூலுடன் இணைத்தோ வெளியிடப் பெறும். இந்நூலுள் உள்ள பாடல்கள் நூறும் வெண்பா யாப்பில் அமைந்தன வாகும். பாடல்கள் திண்ணிய மெய்ப் பொருள் கருத்துகளே வெளிப்படுத்துவன வாகையால், பாடல் அமைப் பும் இறுகலாகவே உள்ளது. அதனைப் பொழிப்பு ஒரளவே குழைவாக எடுத்துக் கூறுகிறது. இதில் உள்ள கருத்துகளே இதைவிட மிக எளிமையாக எடுத்துக் கூறுவதால்ை, அஃது, இந்நூலேப்போல் பலமடங்கு பெரிதாக அமைந்து விடும். காலமின்மை கருதி அவ்வேலேயை என்னுல் செய்ய முடிய வில்லே. பிற்காலத்து, மெய்ப்பொருளுணர்வும் தமிழ்த் தகுதி யும், அறிவு ஒளியும் வாய்க்கப் பெற்ருர் எவரேனும் அதைச் செய்யட்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/4&oldid=758207" இலிருந்து மீள்விக்கப்பட்டது