பக்கம்:உலகு உய்ய.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

அமைத்துக் கொள்ளவேண்டும். போர்'அடிக்கிறது என்று கூறும் பேடிகள் உலகுக்குச் சுமையாவர்.

கெடு நீரார் காமக் கலன்:

'கெட்டழியக் கூடியவர்கள் விரும்பி அணியும் அணி கலன்கள் நான்கு உள’ என வள்ளுவர் கூறியுள்ளார்: அவற்றுள் முதலாவது காலம் தாழ்த்தலாகும். எந்த வேலையையும் உரிய காலத்தில் முழுவதும் முடித்து விட வேண்டும். முழு வேலையையும் ஒத்திப்போடுவது கூடாது என்பது மட்டு மன்று - ஒரு வேலையை அரைகுறையாய் விட்டுவைப்பதும் கூடாது. அரைக் கிணறு தாண்டலாமா! வேலையை அரைகுறையாய் விட்டு வைப்பினும் அல்லது முழு வேலையையும் தள்ளிப் போடினும், பின்னர்-பின்னர் வேலைகள் மலையாய்க் குவிந்து விடும். குவிந்த பின் செய்யத் தொடங்குவது அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதை யாகிவிடும். செய்வன திருந்தச் செய் என்பது ஒளவையின் அறிவுரை. வேலையை நிறுத்தி வைத்து வேடிக்கையில் பொழுது போக்குபவர்கள்,வேலை மலையாய்க் கிடக்கிறதே என்ற உறுத்தலுடன் அமைதி யின்றியே பொழுது போக்கில் ஈடுபட்டிருப்பர். குறை வேலைக்காரர்கள் பொழுது போக்கினால் பெறும் போலி யின்பத்தைவிட, உரிய வேலையை உரிய காலத்தில் முடித்து மனநிறைவு கொள்வதனால் உண்டாகும் இன் பமே பேரின்பமாகும். வாழ்க்கையில் சிறு பகையிருப்பினும் அது பெரிய பகையாக முற்றித் தலைக்கே கேடு விளைப் பது போலக் குறை வேலையும் செய்துவிடும். தீயை முற்றி லும் அணைக்காமல் சிறிதளவு எச்சமாய் (குறையாய்) விட்டு வைத்தாலும் அது பெருகி வளர்ந்து பெருங்கேடு செய்வது போலவே வினைக் குறையும் செய்துவிடும். இதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/106&oldid=544763" இலிருந்து மீள்விக்கப்பட்டது