பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எமிலிஜோலா

இவன் பிரான்சு நாட்டின் வழக்கறிஞன். சிறந்த எழுத் தாளன். பத்திரிகை ஆசிரியன். அரோரி, பிகாரோ என்ற i. பத்திரிக்கைகளை நடத்தி வந்தான் ஜோலா.

இவன் எழுத்துக்களும், வாதத்திறமையும் பிரான்சு நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. நாநா என்ற விலைமாது ஒருத்தியைப் பற்றி நாகா என்ற தலைப்பில் இவன் எழுதிய நூல் ஒன்று உலகில் சிறந்த இலக்கியமாகக் கருதப்பட்டது. நாநா எல்லோருடைய வீட்டிலும் நடமாட முடியவில்லையே தவிர, இவள் பேரால் வெளிவந்த நூல் சீமான்கள் வீடுகள் முதல் சிறு குடிசை வரையில் இருந்தது.


இவள் பிரெஞ்சு நாட்டில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு விபச்சாரி. செல்வச் சீமான்கள் முதல் சிறு தொழில் செய்வோர் வரை இவளை அறியாதார் யாருமில்லை. ஒரு நாள் உப்பரிக்கையில் உல்லாச வாழ்வு நடத்துவாள். மறுநாள் மண் குடிசையில் தரையில் படுத்து உறங்குவாள். நிலையில்லாத வாழ்க்கை, ஓயாத அலைபோல் அடித்துக்கொண் டிருந்தது. வாழ்க்கையின் கசப்பும், இனிப்பும் இவளுக்கு ஒன்று தான்.