பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

43


இழிவான நோக்கங்கொண்டு உண்மைக்குச் செவிசாய்க்க மறுப்பவரே நாஸ்திகர். சமயக் கோட்பாடுகளை எல்லாம் நம்புவதாய்க் கூறிக்கொண்டு சமய ஒழுக்கம் இல்லாதவன் நாஸ்திகரில் நாஸ்திகன்.

-ஹெச்.ஏ.

மதப் பிடிவாதியின் மனம் கண்ணை ஒக்கும், அதிக ஒளி பட்டால் அதிகமாக இடுக்கும்.

-ஹோம்ஸ்

மதப் பிடிவாதம், மதத்தைக் கொன்று, அதன் ஆவியைக் காட்டி மூடர்களைப் பயமுறுத்தும்.

-கோல்டன்

மதப் பிடிவாதத்துக்கு மூளையில்லை, அதனால் யோசிக்க முடியாது; இதயமில்லை, அதனால் உணர முடியாது.

-ஒகானல்


10. தத்துவ ஞானம்

தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும். முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை; மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய். முன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுகமரணம்.

-கோல்ரிட்ஜ்

நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடைமையே அதன் இலட்சணம்.

-தோரோ

வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும்.

-வால்டேர்