பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் -- அவர் ஆயுளுடன் முடிந்தது. மற்றவருடைய செல்வாக்கு இன்றுவரை தொடர்ந்து நிற்கின்றது. அ ஹென்றி கி.ே

  • விஷயங்களை மதிப்பிட்டுப் பேச முடியாத பேச்சாளன், கடிவாளமில்லாத குதிரை. அ. தியோஃபிரேஸ்டன்,
  • ஸிஸ்ரோவின் மென்மையான, நாகரிகச் சொற்பொழிவுகளைக் கேட்ட ரோமானியர்கள், 'நமது சொற்பொழிவாளர் দাণlauলা৯ அருமையாகப் பேசினார்' என்று ஒருவருக்கொருவர் வியந்துகொண்டே சென்றனர். ஆனால், அத்தீனியர்கள் டெமாஸ்தனிஸின் பேச்சுகளைக் கேட்டு, உள்ளங்களில் அந்தச் சொற்பொழிவுகளின் விஷயத்தைப்பற்றியே எண்ணிக்கொண்டு அவரை மறந்துவிட்டு, அவர் பேச்சுகளை முடிக்கு முன்பே, “நாம் ஃபிலிப்புடன் போராடச் செல்வோம்! என்று கூவிக்கொண்டே செல்வார்கள். அ கோல்டன்
  • நடக்க முடியாதவர்கள் குதிரைகள்மீது ஏறிச் செல்வது போல, சொற்பொழிவாளர்கள்: தங்கள் விஷயம் மிகவும் பலவீனமாயிருந்தால், அப்பொழுதுதான் மிகவும் காரசாரமாய்ப் பேசுவார்கள். அ எலிபெரோ
  • பேச்சாளரோ, ஆசிரியரோ, தம் கருத்துகளைவிடத் தம் சொற்கள் சிறியவைகளாக இருக்கும்படி செய்யக் கற்றுக்கொள்ளும்வரை வெற்றி பெற இயலாது. அ எமர்ஸன்

சோகம்

  • வானுலகால் சாந்தப்படுத்த முடியாத சோகம் எதுவும் பூமிக்கு ஏற்படுவதில்லை. அ. மூர்
  • அதிக வேலையாக அலைபவர்களுக்குக் கண்ணிர் விட

நேரமில்லை. ைபைரன் !