பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் சோம்பல் 女

சோம்பல் தீய ஒழுக்கத்தையோ, கெடுதலையோ உண்டர்க்கா விட்டால், பொதுவாக அது துக்கத்தை உண்டாக்கும். அ எலிட்னி ஸ்மித் மெலிந்த உள்ளங்களுக்குச் சோம்பல் சரணாலயம் மூடர்களுக்கு அது ஒய்வு நாள். உ செஸ்டர்ஃபீல்டு வில்லை அதிகமாக வளைத்தால் ஒடிந்துவிடும்; மனத்தை வளைக்காமலே விட்டிருந்தால் அதுவும் ஒடிந்துவிடும். உ பேக்கன் மனிதர்களிலே பதரான சோம்பேறியின் ஆரம்பநடவடிக்கைகள் இப்படியிருக்கும். அவன் மறைவான இடத்தில் சாய்ந்திருக்க விரும்புவான்; காரணமில்லாமல் தெரு முனைகளில் நின்று கொண்டிருப்பான் எங்காவது போய்க்கொண்டேயிருப்பான் அல்லது அதற்கடுத்த நாளோ, பல கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென்று எண்ணம் கொண்டிருப்பான். ைடிக்கென்ஸ் சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள்: ஏனெனில், அதற்கு இன்று ஒரு நாளை கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும், அ குரோகுவில் சோம்பல் உள்ளத்தின் உறக்கம். அ வாவெனார்.கூஸ் அவனுக்குப் பிறர் உதவியில்லாமல் முடியாது. அ. ஜான்ஸன் தனித்து இயங்கக்கூடிய முறையில் கடவுள் எவனையும் படைக்கவில்லை. க ஃபெல்ட்ஹாம் சோஷலிஸம்

  • உலகம் முழுவதிலும் மனித சமுதாய அமைப்பில் சோஷலிஸத் தத்துவம் படிப்படியாக ஊடுருவிப் பாய்ந்திருக்கிறது என்பதை