பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/219

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

- நாகரிகக் கோலம் ஒரு கொடுங்கோலனைப் போன்றது. அதன் பிடியிலிருந்து நம்மை எதுவும் விடுவிப்பது இல்லை. அ பாஸ்க தனித் தன்மையை விட்டுவிடுங்கள். பழைய முறைகளைப் பிடித்துக்கொண்டிருப்பதைவிட புதிய முறையில் அதிகக் கர்வம் தோன்றாமலும் இருக்கலாம். அவை மூடர்கள் கண்டு பிடித்தவைகளாகவும் இருக்கலாம். அறிஞர்கள் அவைகளை மறுப்பதற்குப் பதிலாகப் பின்பற்றவும் செய்யலாம். க. ஜோபெர்ட் புதுமைத் தோற்றம் உள்ளது ஒவ்வொன்றுமே தீயது என்றோ பழையது ஒவ்வொன்றும் நல்லது என்றோ கருதுவது முற்றிலும் தவறாகும். உ மோமெரி நாகரிகத் தோற்றம் எப்பொழுதும் புதுமையாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது தெவிட்டிப் போய்விடும். அ லோவெல் நவநாகரிகத்தில் மிகவும் முன்னதாகச் சேரவும் வேண்டாம் அதிக நாள்வரை பின்தங்கி இருக்கவும் வேண்டாம். எந்தக் காலத்திலும் அமிதமான இரண்டு எல்லைகளின் பக்கம் நிற்க வேண்டாம். அ லவேட்டர் நாடகக் கொட்டகை 六 நாடகங்கள் ஒழுக்கத்தைப் போதிக்கின்றன என்றும். நாடக அரங்கு வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்றும் கூறப்பட்ட போதிலும், இந்தக் கூற்றுகளுக்கு உண்மை யிலும் அனுபவத்திலும் ஆதாரம் இல்லை. ஸர் ஜான் ஹாகின்ஸ் நாடகத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு நேர்மையாகவும் தாராளமாகவும் நடந்துகொள்கின்றனர் என்பது ஆச்சரியமா யிருக்கிறது. நியாயமான கட்டத்தில் நாம் அனைவரும் டிகோபித்துக் கைகளைத் தட்டுகிறோம். தீயதை அனைவரும்