பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/228

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ, ζητώρωήνονταθ' t:: 243 அல்லது பிரயாணம்பற்றி ஒரு மனிதன் நம்பி, தான் போவதற்குத் தைரியமோ ஊக்கமோ இல்லாமல், மற்றவர்கள் போகும்படி உற்சாகப்படுத்தக்கூடும். அ ஜான்ஸன் நீதி மொழிகளைக்காட்டிலும் பிறர் காட்டும் மாதிரியையே பலர் பின்பற்றுகின்றனர். ஆனால், மாதிரியைக்காட்டிலும், நேரடியாக நீதிமொழிகளிடமிருந்தே கற்றுக்கொள்வதுதான் மேலானது. அ வார்விக் நூலாசிரியர் படிப்பவர்களைக் கவரக்கூடிய ஆசிரியரின் இரண்டு ஆற்றல்களாவன: புதிய விஷயங்களைப் பழக்கப்படுத்துதல், பழைய விஷயங்களைப் புதுமையுடன் அளித்தல்.க ஜான்ஸன் நன்றாக எழுதுதல் என்பது நன்றாகச் சிந்தித்தல். நன்றாக உணர்தல். நன்றாகத் தெரிவித்தலாகும்; அதாவது, அறிவு. உயிர்த் துடிப்பு. நல்ல கவைத்திறன் ஆகியவை ஒருங்கே வேண்டும். அ பஃப்பன் ஆசிரியராக விரும்புபவன் முதலில் மாணவனாக இருக்க வேண்டும். அ டிரைடன் தந்தையார் தாயார் எவரும் தம் குழந்தைகள் விகாரமாக இருப்பதாக எண்ணுவதில்லை; தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் இந்தக் குனம், உள்ளத்தால் படைக்கும் படைப்புகளில் மேலும் அதிகமாயிருக்கும். ைசெர்வான்டிஸ் மிகவும் சுயமாக எழுதும், ஆசிரியர்கள் அவ்வாறு சுயமாகப் படைப்பவர்களாக் விளங்குவதன் காரணம், அவர்கள் புதிய விஷயத்தைக் கூறுகின்றனர் என்பதன்று. அவர்கள் தாம் சொல்ல விரும்பும் விஷயங்களை முன்பு எவரும் சொல்லியிராதவை போல எடுத்தளிப்பதே காரணம். அ. கதே