பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்
  • ஒறுக்கும் மதுகை உரனுடைய யாளன்

பொறுக்கும் பொறையே பொறை. கி. நாலடிய, பொறுமையின்மை

  • பொறுமையின்மை சிறு குளிரைப் பெரிய ஜூரமாக்கிவிடும் ஜூரத்தைப் பிளேக் ஆக்கிவிடும் அச்சத்தை ஏக்கமாக்கிவிடும். கோபத்தை வெறியாக்கிவிடும் சோகத்தைப் பெருந்துக்கமாக்டி விடும். அ ஜெரிமி டெயிலு
  • வயதோ, சோகமோ உதிரத்தை உறிஞ்சுவதைக்காட்டிலும், பொறுமை, பொறுமையின்மை அதிகமாக உறிஞ்சிவிடும்.

அ கிளியாள் பொன்

  • மூடனை மறைக்கும் திரை.பொன். அதனால் அவனுடைய குறைகளை உலகம் கண்டுகொள்ள முடியாது. ஃபெல்ட்ஹாம்
  • உன் தங்கம் கையிலிருந்தாலும் இருக்கட்டும். அதை இதயத்தில் பதித்துவிட வேண்டாம். அ ஃபுல்லர்
  • தானியேலைப் போலத் தங்கத்தையும் இறைவனையும் சேர்த்து

வைத்துக்கொள்ளக்கூடியவர் எத்தனை பேர் இருக்கின்றனர்? அ பிஷப் வில்லியர்ஸ்

  • உரைகல் தங்கத்தைச் சோதிப்பதுபோல், தங்கம் மனிதனைச் சோதிக்கிறது. - சிலோ

போர்வீரர்

  • நீர்க்குமிழி போன்ற புகழை நாடிப் போர்வீரன் பீரங்கியின்

வாய்க்குச் செல்லுகிறான். க ஷேக்ஸ்பியர்