ப. ராமஸ்வாமி : 307 மொழி ஒரு புனிதமான பொருள். அது வாழ்க்கையிலிருந்து வளர்ந்து வருவது. வாழ்க்கையின் வேதனைகள். இன்பங்கள். அதன் தேவைகள். அயர்வுகள் ஆகியவற்றில் அது உருவா கின்றது. ஒவ்வொரு மொழியும் அதைப் பேசி வரும் மக்களுடைய ஆன்மா எழுந்தருளியிருக்கும் ஆலயமாகும்.
ைஆ. வே. ஹோம்ஸ்
மெளனம் அறிவுள்ள மூளைதான் நாவை அடக்கியிருக்கச் செய்யும். - க. ஜே. லூகாஸ்' மெளனத்திற்கு ஆச்சரியமான எத்தகைய ஆற்றலிருக்கின்றது உதடுகள் மூடியிருக்கும் பொழுது எத்தனை தீர்மானங்கள் செய்யப்பெறுகின்றன. எத்தனை ஆன்மார்த்திகமான வெற்றிகள் அடையப்பெறுகின்றன:ஆன்மா, இறைவனின் பார்வை தன்மீது விழுவதை அந்தரங்கமாக எவ்வளவு உணர்கின்றது . எமர்ஸன் பேசாத வார்த்தை ஒருபோதும் தீமை விளைவிப்பதில்லை. க. கோளத் மெளனமாயிருக்கத் தெரியாதவனுக்கு நன்றாகப் பேசவும் தெரியாது. அ புளுடார்க் உடலுக்கு உறக்கமும் ஒய்வும் ஊட்டமும் அளிப்பது போல, உள்ளத்திற்கு உண்மையான மெளனம் ஓய்வளிக்கும். அது சிறந்த ஒரு பண்பாகும். அது தவறுகளை மறைக்கும் இரகசியங் களைப் பாதுகாக்கும் தகராறுகளை நீக்கும் பாவத்தைத் தடுக்கும். அ பென் நான் ஒரு வார்த்தையும் பேசவில்லை; அற்பமான இன்பங்கள். பேசினால்தான் உண்டாகும். ஆனால் உள்மனத்தின் ஆனந்தம் ஊமையாகவே பிறக்கின்றது. க. எச். நீல் யுததம யுத்தங்களிலே ஒருகாலும் நல்ல யுத்தம் என்பதே கிடையாது. அதே போலத் தீமையான அனிமதி என்பதும் கிடையாது. அ ஃபிராங்க்லின்