பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





அரசாங்க அங்கங்களும், சட்ட நிர்வாகமும் மட்டும் அரசிய, சமூகத்திற்குப் பெருமையுண்டாக்க முடியாது. இ டேனியல் வெப்ஸ்ட ஒரு நகரம், நல்ல சட்டங்களால் ஆளப்பெறுவதை காட்டிலும், ஒரு நல்ல மனிதனால் ஆளப்பெறுதல் மேலாகும் அ அரிஸ்டாட்ட ஆட்சி செய்வதை மிகச்சிலருடைய வசத்தில் விட்டு விடக்கூடாது சட்டம் இயற்றுவதை மிகப்பலருடைய கையி. ஒப்படைக்கவும் கூடாது. 2 ஸ்விஃப்ட் அஞ்சாமை, ஈகை, அறிவு.ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. ைதிருவள்ளுவரி அறனிழுக்காது அல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடையது அரசு. அ. திருவள்ளுவ: அரசியல் 女 அரசியலைப் போன்ற சூதாட்டம் வேறில்லை. டிஸ்ரேலி ஒழுக்க முறைப்படி தவறாயுள்ளது. அரசியல் முறையில் சரியானதாக ஆகிவிடாது. அ ஓ கானல் சமுதாய வாழ்க்கையில், ஒழுக்க முறைப்படியுள்ள வாழ்க்கையில், அரசியல் மிகவும் சுருக்கமான அளவிலேயே பாதிக்கின்றது. தனியான ஒரு நல்ல புத்தகம் இதைவிட அதிகமாக மக்களிடத்தில் ஆதிக்கம் பெற்று விளங்குகின்றது அ. கிளாட்ஸ்டன், நாட்டுக்குச் சிறந்த சேவை செய்பவனே தன் கட்சிக்குச் சிறந்த சேவை செய்பவனாவான். அ. பி. ஹேய்ஸ்