பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

11


ஒடிசி தரும் காட்சிகள்

ஒடிசி காவியமானது, ஒடிசியஸ் (Odysseus) என்ற மாவீரனது, வீரச்செயல்கள் பற்றி விவரிக்கும் மாகாவியம்,

இதில், ஒடிசியஸ் தனது அழகான மனைவியான பெனிலாப் என்பவளை தனது நகரமாகிய இதாகாவில் விட்டு விட்டு, டிராய் நகரத்தை மீட்கும் மாபெரும்போருக்குச் சென்று விடுகிறான்.

பேரழகியான பெனிலாப்பின் மனதைக் கவர்ந்து, மணந்து கொள்வதற்காக, பலவீரர்கள் பெனிலாப்பின் வீட்டிற்கு முன்னே வந்து, பலவீரச் சாகசச் செயல்களை செய்துகாட்டி, தங்களது ஆண்மைச் செயல்களால், அவளது அன்பைப் பெற்று கரம்பிடிக்க முயல்கின்றார்கள் என்று ஹோமர் விளக்குகின்றார்.

இங்கே ஒடிசியஸ், போரிட்ட போரிலே வெற்றி பெற்று தன் தாயகம் திரும்பும்போது, அல்சினஸ் எனும் அரசனால் விமரிசையாக வரவேற்கப்படுகிறான். அவனுக்கு அற்புதமான விருந்தொன்றையும் அளிக்க அல்சினஸ் ஏற்பாடு செய்கிறான்.

சுவையான விருந்து முடிந்த பிறகு விருந்தினர்களைக் கெளரவிப்பதற்காக, பல உடற்கட்டு நிகழ்ச்சிகளையும் அதன்மூலம் எழுகின்றவிர தீரச்செயல்களையும் காட்டிடும் ஏற்பாடுகளையும் செய்திருந்தான்.

மல்யுத்தப் போட்டிகள், குத்துச்சண்டைப் போட்டிகள், எடைத் தூக்கி எறியும் போட்டிகள் போன்ற பல பலம் காட்டும் போட்டிகள் நடைபெற்றன.

விளையாட்டுப் போட்டி நேரங்கள்

விளையாட்டுப் போட்டிகள், உடற்கல்வி இவைகளுக்கு என்று தனித்தனியாக நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை