பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O4 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எல்பிரிங் பீல்டு கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டத்தை (B.P.E., M.P.E) உடல்கல்வித் துறையில் முதன் முதலாக 1906ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். அமெரிக்க உடற் கல்விக் கழகத்திற்குச் செயலர் பொறுப்பேற்று 25 ஆண்டு காலம் சேவை செய்தார். இவர் 6TQpálu (Physiolgy of Exercise) p_Ls) Luo's flullā உடலியக்கமும் என்ற நூல், மிகப் புகழ் வாய்ந்த புத்தகமாக அமைந்து விட்டது (1924) ஆடுகள இயக்கம் என்றால் என்ன (Play Ground Movement) இந்த எழுச்சியான இயக்கத்தின் தொடக்கத்திற்குக் காரணகர்த்தாவாக இருந்தனர் டாக்டர் மேரி சாகர் சிவிஸ்கா. (Dr. Marie Zaker Zewska) ursröl_6ör E856d7# Garribģ5 @ßġ5 அம்மையார், ஒரு முறை பெர்லின் சென்றபோது, அங்கே பூங்காக்கள் விளையாடும் இடங்களாக மாற்றப்பட்டு பயன்படுவதைக் கண்டபோது, அமெரிக்க நாட்டிலும் இப்படிச் செய்தால் என்ன என்று அவர் மேற் கொண்ட சிந்தனையின் விளைவே ஆடுகள இயக்கமாக உருவெடுத்தது. பூங்காக்களில் மணல் பரப் பி, அவற்றின் மீது குழந்தைகளை விளையாடச் செய்யும் பெர்லின் முறையை, பாஸ்டன் நகரில் மேரி அறிமுகப்படுத்தினார். இது 1885ம் ஆண்டு பார்மென்டர் தெருவில் முதன் முதலாக ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவெங்கும் இப்பயிற்சி முறை பின்பற்றப்பட்டது. நெருக்கமான பகுதிகளில் வாழ்கின்ற குழந்தைகள், வெளியே வந்து விளையாடுதற்காக, பூங்காக்கள் அதிக அளவில் உதவின. ஒவ்வொரு பூங்காவும், ஆடுகளமாக மாறிய போது, அதற்கென்று கண் காணிக்கும்