பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

21


ஐம்பதும் அறுபதும்

ஒரு ஸ்பார்ட்டா நகரத்து வீரன், தனது 50 வதுவயதில்தான் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து ஓய்வு பெற முடிகிறது. ஆனாலும் அது நிரந்தர ஓய்வு அல்ல.

நாட்டுக்கு அன்னியரின் படையெடுப்பு போன்ற காரணங்களால் நெருக்கடி ஏற்படும் போது, ஓய்வு பெற்றவர்களின் சேவையும் நாட்டுக்குத் தேவைப்படுகிறது. நாடு அவர்களை அழைக்கும் போது, நிச்சயமாக வந்து சேரவேண்டும் என்பது நியதி.

ஸ்ப்பார்ட்டன் வாழ்க்கை அமைப்பு

ஸ்பார்ட்டா நாடு பின்பற்றிய உடற்கல்வி முறை, மிகவும் கடுமையாகவே இருந்தது. இராணுவ சேவை புரியும்தகுதிகள் நோக்கியே, தேகம் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டது.

இளைஞர்களுக்குக் கட்டுப்பாடான இராணுவப் பயிற்சி மூலமே வரும் என்று ஸ்பார்ட்டா நாடு எண்ணியது. இளைஞர்கள் பெற்ற பயிற்சியானது, இருட்டைக் கண்டும் அவர்கள் அஞ்சவில்லை. அழுவது என்பது அவமானமான காரியம் என்று உணர்ந்தார்கள்.

இளைஞர்களுக்குத் தனிமையோ, அந்தரங்கமோ எதுவுமே இல்லை. எப்பொழுதும் எல்லோருடனும் இருந்தாக வேண்டும் என்பது தான் வாழ்க்கை முறையாக இருந்தது.

இளைஞர்களுக்கு வீட்டில் வாழும் வாழ்க்கை அமைய வில்லை. பொது இடங்களில் உறங்க, பொது விடுதிகளில் உண்ண அவர்களுக்கு மேல் வயது வந்த தலைவர்கள் மேற்பார்வையில் இயங்க இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை முறை வரையறுக்கப்பட்டிருநதது.