பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விஞ்ஞானிகள் 45 கிடைத்தது. மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளவும், தேர்வுகளில் எழுதவும் எல்லாக் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. வானம் எவ்வளவு தொ8லவோ அதற்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவு எவ்வளவு, அதற்கும் சூரியனுக்குமுள்ள தூரம் எவ்வளவு, விண்மீன் களின் இயக்கங்கள் எத்தகையது என்பதைக் கண்டுபிடித்து உலகுக்கும் அடுத்து வந்த விஞ்ஞானிகளுக்கும் பயன்தரத் தக்க முறையில், ஒரு டெலஸ்கோப்பைத் தந்த மிகப்பெரிய விஞ்ஞானி நியூட்டன் ஆவார். மீண்டும் நோய்வாய்ப்பட்டவர் 1727 மார்ச்சு திங்கள் இருபதாம் நாள் இயற்கையெய்தினர். அவருடைய சடலத்தை வெஸ்ட்மினிஸ்டர் அப்பே என்ற இடத்தில், மிக சிறப்பான முறையில் கல்லறை எழுப்பப்பட்டு, அதில் அடக்கம் செய்யப்பட்டது. எண்ணற்ற அவரது உருவப்படங்கள் நாடெங்கும் வைக்கப்பட்டன. கெல்லர் என்பவரால் ஒன்றும், தார்ன்ஹில் என்பவரால் ஒன்றும் தரப்பட்டது. ராயல் கழகத்தில் மூன்று படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. டாக்டர் ஸ்மித் என் பவரால் அவருடைய முழு உருவச்சிலே நன்கொடையாகத் தரப்பட்டு, 1750 ல் கல்லூரியின் முன்பாக வைக்கப்பட்டு, அதனடியில் கவிஞர் வொர்ட்ஸ்வொர்த் என்பவரின் மிக உயர்ந்த கவிதை வரையப்பட்டிருக்கிறது. “The marble index of a mind for ever voyaging through strange seas of thought alone”. போப்பாண்டவரால் தரப்பட்ட வாசகங்கள் : “Nature and nature’s laws lay hid in night; God said, ‘Let Newton be’ and all was light”.